எம்.ஜே.எம். சஜீத்-
மலேசிய லிங்கன் பல்கலைக்கழகமும் இலங்கை ஐ.சி.பி.எஸ். நிறுவனமும் இனைந்து குறைந்த கட்டண அடிப்படையில் மாணவர்களுக்கு தாதிப் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அட்டாளைச்சேனை ஐ.சி.பி.எஸ். நிறுவனத்தில் இடம்பெற்றது.
இலங்கை ஐ.சி.பி.எஸ். நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ. லியாகத்த அலி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மலேசிய லிங்கன்
பல்கலைக்கழகத்தின் பிரதி நிதி டாக்டர். எச்.ஜே.எச். பிபிலோன் அப்துல்லா
பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மலேசிய நாட்டின் சிரேஷ்ட தாதி போட்டின் ஹபிஸா, பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் றெஜிடோர் லில் டியோசோ, லிங்கன் பல்கலைக்கழத்தின் இலங்கைக்கான முகாமையாளர் ஷல்மி பாறூக் உட்பட பிரதேச வைத்தியர்களும் தாதி பயிற்சி மாணவர்களும் கலந்து கொ ண்டனர்.
வேலையற்று காணப்படும் இளைஞர்கள் தாதி பட்டபடிப்பினை நிறைவு செய்வதன் மூலம் வெளிநாடுகளுக்கு சென்று அதிக சம்பளம் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது என பிரதம அதிதி தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment