பொத்துவில் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு இசை வாத்தியக்கருவிகள் செஞ்சிலுவைச்சங்கம் அன்பளிப்பு

பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ. தாஜகான்-

ங்கா செலேன்ஞ் குழுமத்துடன் நான்காவது தடவையாக கைகோர்த்துள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாறைக்கிளை, கற்றல் துணைப்பாட விதானச் செயற்பாடுகளுக்கு பங்களிப்புச் செய்யும் வகையில் சாதி, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால், பாடசாலைகளுக்கு இசை வாத்தியக் கருவிகளை அன்பளிப்புச் செய்து வருகின்றது.

அந்த வகையில், அண்மையில் பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத் திற்கும், பாணமை சிங்கள மகா வித்தியாலயத்திற்கும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இசை வாத்தியக் கருவிகளை அன்பளிப்புச் செய்துள்ளது.

சங்கத்தின் அம்பாறைக்கிளை, அக்கரைப்பற்றுக் காரியாலயத்தில் நடாத்திய செய்தி யாளர் சந்திப்பில், கிளையின் தவிசாளர், சுனில் திஸாநாயக்க சங்கத்தின் மும்மாத இதழ்களான செய்திக்கடிதம் மற்றும் சமுதாயம் என்பவற்றை கையளித்து உரை யாற்றும்போது தெரிவித்தார். 

1863இல் ஜீன் ஹென்றி டூனன்ட் அமைத்தே குழுவே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உருவாகக் காரணமானது. 1936இல் இலங்கைக்கு வந்த பிரித்தானிய செஞ் சிலுவைச் சங்க மத்தியகிளை, 1972இல் இலங்கை செஞ்சிலுவைச் சங்கமானது.

உலகில் 186 நாடுகளில் பரந்துள்ள இச்சங்கம், நாட்டடின் சகல மாவட்டங்களிலும் கிளைகளைக் கொண்டுள்ளது. அம்பாறைக்கிளை 1990. வைகாசி 03இல் அமைக் கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

உலகில் எங்கேனும் மனித வர்க்கத்திற்கு ஏற்படும் துன்பங்களைத் தடுப்பதையும், குறைப்பதையும் நோக்காகக் கொண்ட சங்கத்தின் மனிதாபிமானப் பணியில் ஊட கத்துறை மூலம் நீங்களும் இணைந்து பங்காற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் அழைப்பு விடுத்தார். 

பொத்துவில், திருக்கோயில் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச ஊடகவியலாளர்கள் பங்கேற்றிருந்த இச்சதிப்பில், சங்கத்தின் பிரதித்தவிசாளர் ஜே.ஜெகனேஸ் மற்றும் செய்திமடல் ஆசிரியர் சந்திரிகா அபேரத்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :