27 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார் அட்டாளைச்சேனை றிம்சான் (S-M.L.T)

எம்.ஜே.எம்.சஜீத்-

னது 27 வருட அரச சேவையில் இருந்து இறுதியாக களுவாஞ்சிகுடி ஆதரா வைத்தியசாலையில் கடமையாற்றிய பின்னர் இன்றைய தினம் (2026.04.09) ஓய்வு பெறுகின்றார் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்ப அத்தியட்சகர் மீராமுகைடீன் முகம்மது றிம்சான் (Superintendent M.L.T)

தனது தொழில்முறை திறமையாலும் ஒழுக்கத்தாலும் சக ஊழியர்களிடமும் மேலதிகாரிகளிடமும் நல்ல மரியாதையையும் நம்பிக்கையையும் பெற்றிருந்தார். குறிப்பாக ஆய்வுகூட சேவைகளில் துல்லியமும் தரமும் பேணப்பட்டு நோயாளிகளுக்கான சரியான மருத்துவத் தீர்மானங்களுக்கு ஆதரவளித்தது அவரது பணியின் சிறப்பம்சமாகும்.

தனது ஆரம்ப கால சேவையினை மன்னார் ஆதார வைத்தியசாலை, அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலை, நிந்தவூர் ஆதார வைத்தியசாலை, பொத்துவில் ஆதார வைத்தியசாலை மற்றும் இறுதியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய அவர், அங்கு தனது கடமைகளை முழுமையான அர்ப்பணிப்புடன் நிறைவேற்றி, பொதுமக்கள் நலனில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். பலரின் வாழ்வில் நம்பிக்கையை உருவாக்கிய அவரது சேவை சமூகத்தில் உயர்ந்த மதிப்பைப் பெற்றுள்ளது.

27 ஆண்டுகள் தொடர்ந்து மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவரது சேவை,சுகாதாரத் துறையில் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. அவரின் ஓய்வு வாழ்க்கை ஆரோக்கியம், அமைதி மற்றும் வளம் நிறைந்ததாக அமைய அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :