பெண்களின் செல்வமும் செல்வாக்கும்' எனும் பெயரிலமைந்த சிறப்புச் சந்தை




த.நவோஜ்-

பெண்களின் செல்வமும் செல்வாக்கும்' எனும் பெயரிலமைந்த சிறப்புச் சந்தை மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழைக்காலை - இலுப்படிச்சேனைக் கிராமத்தில் இடம்பெற்றது.

முற்று முழுவதுமாக பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட இரசாயனம் கலக்காத மரக்கறிகள் மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்கள் என்பன இந்த சிறப்புச் சந்தையில் விற்பனைக்கிடப்பட்டிருந்தன.

நலியுற்ற பெண்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் சேவ் த சில்ரன் நிறுவனத்தின் நிதியுதவியுடன் வை.எம்.சீ.ஏ நிறுவனத்தினூடாக இந்தத் திட்டம் அமுலாக்கம் செய்யப்படுகின்றது.

இலுப்படிச்சேனை மகாலட்சுமி மகளிர் சுயமுன்னேற்றக் குழுவின் தலைவி கருணாகரன் சசிகலா தலைமையில் நடைபெற்ற பெண்களின் செல்வமும் செல்வாக்கும் சிறப்புச் சந்தை திறந்து வைக்கும் நிகழ்வில் வை.எம்.சீ.ஏ அமைப்பின் தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பற்றிக், வெளிக்கள உத்தியோகத்தர் பயஸ் கிருசாந்தன், இலுப்படிச்சேiனை பிரதேச கிராமசேவகர் டி.வரதராஜன், சமூர்த்தி உத்தியோகத்தர் கே.சிவசம்பு ஆகியோர் உட்பட கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :