பாலமுனை சீட்ஸ் அமைப்பினால் கூட்டு உழ்ஹிய்யா திட்டம்



பி. முஹாஜிரீன்-

பாலமுனை சீட்ஸ் (சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கம்) அமைப்பினால் இவ்வருடம் கூட்டு உழ்ஹிய்யா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு புனித ஹஜ்ஜூப் பெருநாள் தினமான நேற்று (06) திங்கட்கிழமை உழ்ஹிய்யா இறைச்சி விநியோக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் பி. முஹாஜிரீன் தலைமையில் சின்னப்பாலமுனை மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏழைக் குடும்பங்களுக்கு இறைச்சி விநியோகிகப்பட்டது. இதில் உழ்ஹிய்யா பங்குதாரர்களும் அமைப்பின் உப தலைவர் எஸ்.எச். தம்ஜீது, பொதுச் செயலாளர் ஏ.ஜி. அஸ்மின், பொருளாளர் எம்.எச். நிஸார்தீன், செயற்குழு உறுப்பினர்களான ஏ.ஜி. பஸ்மில், ஏ. றமீஸ் அகமட், எஸ்.எச். முர்சித், ஜே. சதாத், எஸ்.ரி. தஸ்தகீர், ஏ.எம். அதுஹான், எஸ்.எம். றியான் உட்பட ஏனைய அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இதற்கமைய இத்திட்டத்தில் இணைந்து கொண்ட இதன் பங்கதாரர்களுக்கும் இவ் இறைபணியை சிறப்பாக மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கி உதவிய அனைவருக்கும் சீட்ஸ் அமைப்பினர் தமது நன்றிதை; தெரிவித்துக்கொள்கின்றனர். இக்கூட்டு உழ்ஹிய்யா திட்டமானது எதிர்காலத்தில் ஒவ்வொரு வருடமும் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் இதற்கான பங்குதாரர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :