கடந்த 28ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற பொதுபலசேனாவின் மாநாட்டில் தெரிவித்த பௌத்த வாக்குகள் 10 இலட்சமே அடுத்த ஜனாதிபதியை தீர்மாணிக்கும் சக்தியாக இருக்கும்.
ஹக்கீம், சம்பந்தன், தொண்டமான் ஆகியோரது வாக்குகளாக அது இருக்கப்போவதில்லை. அதற்காகவே விசேடமாக பொதுபலசேனா கொழும்பு மாநாட்டில் சொன்னது போன்று சிகல உருமைய கட்சியின் வாக்குகளை சேர்ந்து எமது 10 இலட்சம் வாக்குகளை கொண்டுள்ளோம். இதன்பிரகாரம் நாம் அடுத்த பௌத்த கொள்கைக்கான ஒரு ஜனாதிபதியை நாங்களே தீர்மாணிப்போம்.மேற்கண்டவாறு சிகல உருமைய கட்சியின, மேல்மாகாணசபையின் அமைச்சர் உதயன் கம்மன்வில நேற்று கண்டியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தின்போதே தெரிவித்தார்.
கடந்தகால ஜனாதிபதித் தேர்தல்களின்போது இவர்கள் மூவரும் ரணில் விக்கிரமசிங்க, சரத்பொன்சேகாவையே ஆதரித்தார்கள். ஆனால் சிகல உருமைய கட்சி 2005ஆம் ஆண்டு இந்த ஜனாதிபதியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒன்று உள்ளது. நாமே மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியை தெரிவுசெய்தோம்.
எமது கட்சி அரசாங்கத்துடன் செய்த 2005ஆம் ஆண்டைய ஒப்பந்தத்தை நாங்கள் விலக்கி புதிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவோம். அதில் இந்த நாட்டின் பௌத்த மக்களது அபிலாசைகளையும் பௌத்த கொள்கையும் கொண்ட ஒரு ஒப்பந்தத்திற்கு ஏற்கும் ஒருவருக்கே எமது கட்சி ஆதரவு வழங்கும். எனத் தெரிவித்தார்.
பொதுபலசேனாவின் ஞானசார தேரரும் ஆரம்பத்தில் சிகல உருமையைக்கட்சியை அங்கத்தவராக இருந்து செய்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment