சர்வதேசத்தின் முகவர்களை ஜனாதிபதியாக்க சிலர் முயற்சிக்கின்றனர் -அமைச்சர் அதாஉல்லா





பஷீர் ஜுனைதீன்-

ர்வதேசத்தின் ஊதுகுழலாகசெயற்படுபவர்களை ஜனாதிபதியாக்க இன்று முழு சர்வதேசமும் வரிந்துகட்டிக்கொண்டுசெயற்படுகின்றது.
சுவர்ணபுரவரவிருதுவழங்சுகும் விழாவில் அமைச்சர் அதாஉல்லா

உள்ளுராட்சிமற்றும் மாகாணசபைகள் அமைச்சினால் வருடந்தோறும் நடாத்தும் சுவர்ணபுரவரவிருதுவழங்சுகும் விழாவும் உள்ளுராட்சிதேசியமாநாடும் இவ்வாண்டுபத்தரமுல்லவோட்டர்ஸ் ஏச் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்குதேசியகாங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சிமாகாணசபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஅவர்களின் அழைப்பின் பேரில் அதிமேதகு ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ பிரதமஅதிதியாககலந்து கொண்டு போட்டியில் முதலாம் நிலைக்குத் தெரிவுசெய்யப்பட்ட மாநகர, நகர, பிரதேசசபைகளுக்கு விருதுகளை வழங்கிவைத்தார். 

இந்நிகழ்வில்அமைச்சர்கள்,முதலமைச்சர்கள்,நாட்டில் காணப்படும் 338 உள்ளுராட்சிசபைகளின் தலைவர்கள்,பிரதிஅமைச்சர்கள்,பாராளுமன்றஉறுப்பினர்கள்,ஆளுனர்கள் மற்றும் அரசஉயர் அதிகாரிகளும் கலந்துசிறப்பித்தனர்.
முதலாம் நிலைக்குத் தெரிவுசெய்யப்பட்டுவிருதுகளைப் பெற்றஉள்ளுராட்சிசபைகள் வருமாறு:

01.குருநாகல் மாநகர சபை
02.சீதாவக்க நகர சபை
03.திக்வெல்ல பிரதேச சபை

இந்நிகழ்வில் உரையாற்றியஅமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா....
வடக்கு,கிழக்கு,தெற்குஎன்றபிரிவினைகளின்றிதீவின் எல்லாப்பாகங்களிலுமுள்ளஉள்ளூராட்சிநிறுவனங்களின் தலைவர்கள்,மக்கள் பிரதிநிதிகள்,துறைசார் உயர் அதிகாரிகள் அனைவரும் இன்றையதினத்தில் சுதந்திரமாகஒன்று கூடியுள்ளனர். இச்சூழலுக்கு வழி வகுத்தநமதுநாட்டின் தலைமைஅதிமேதகு ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குமுதற்கண் நன்றி கூறுகின்றேன். இன்றுநடைபெறும் உள்ளூராட்சிதேசியமாநாடும்சுவர்ணபுரவரவிருதுவழங்சுகும் விழாவும்அன்னாரின் பிரதமபங்கேற்புடன் நடைபெறுவதுமகிழ்ச்சிதருகிறது.

நமதுநாட்டைப் பொறுத்தவரையில் கொடியதுயர்நீங்கிநாம் இன்றுசுதந்திரமாகவாழ்கின்றோம். இதனைஏற்படுத்தித் தந்தவர் நமது ஜனாதிபதிஅவர்கள். நாம் இன்றுநிம்மதிப் பெருமூச்சுவிட்டவர்களாக இவ்வமைதிச் சூழலில் வாழ்வதனைசகித்துக் கொள்ளமுடியாதசிலஉள்நாட்டு,வெளிநாட்டுவிஷமிகள் ஜனாதிபதிஅவர்களைசெயலிழக்கச் செய்துஅதன் மூலம் சர்வதேசத்தின் ஊதுகுழலாகசெயற்படுபவர்களை ஜனாதிபதியாக்க இன்று முழு சர்வதேசமும் மஹிந்த ராஜபக்ஷ என்றஎமதுதேசம்மீதுஅன்புகொண்டவரைவீழ்த்தவருந்துகட்டிக்கொண்டுசெயற்படுகின்றது. அதன் முதற்கட்டமாகஐரோப்பியஒன்றியம் எல்.ரி.ரி.ஈமீதானதடையினைநீக்கியுள்ளது. எனவே,எமதுநாட்டில் விடுதலைப்புலிகளால் பட்டவேதனைகளும் துன்பங்களும் அந்தக் கொடியநாட்கள் நமக்குத்தான் தெரியும். 

அதுசர்வதேசத்திற்குதெரியாது. எனவேமீண்டுமொரு இருண்டயுகம் நமதுநாட்டைபீடிக்கவிடாதுபாதுகாப்பது இலங்கையர் ஆகியநம் ஒவ்வொருவரி;னதும். தார்மீகப் பொறுப்பாகும்;.
வளர்ச்சியடைந்துவரும் கிராமங்களின் தேவைகளுக்கேற்றவாறுஅவைகளைச் சிறியநகரங்களாகஅபிவிருத்திசெய்வதற்கானமுதற்கட்டம் வடக்கு,கிழக்குமாகாணங்களில் உள்ளூராட்சிச் சபைகளின் முன் மொழிவுகளினூடாகநடைமுறைப்படுத்தப்பட்டன. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சுமார் 108 உள்ளூராட்சிப் பிரதேசங்கள் தெரிவுசெய்யப்பட்டு' புற -நெகும'என்றஅபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிறியநகரங்களாககட்டியெழுப்பும் நடவடிக்கைகளும் வெற்றிகண்டுவருகின்றன.

நாட்டில் காணப்படும் பெருந்தெருக்களைமாத்திரமன்றி ஏனைய வீதிகளையும் அபிவிருத்திசெய்யவேண்டும் என்பதில் அதிமேதகு ஜனாதிபதிஅவர்கள் அக்கறைகொண்டுள்ளார். இதற்கிணங்கஎனதுஅமைச்சுவெளிநாட்டுக்கடன் உதவிகளைப் பெற்றும் உள்நாட்டுநிதியங்களிலிருந்தும் பணஒதுக்கீடுகளைச் செய்துமாகாணபெருந்தெருக்களையும் உள்ளூர் வீதிகளையும் அபிவிருத்திசெய்துவருகின்றது.

பின்தங்கியஉள்ளூராட்சிநிறுவனங்களை இனங்கண்டுஅவைகளையும் கட்டியெழுப்புவதற்காகநிதிஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. திண்மக்கழிவுமுகாமைத்துவம் உலகம் முழுவதும் ஒருசவாலாகஅமைந்திருக்கும் இவ்வேளையில் நாமும் அதற்குமுகம் கொடுக்கவேண்டியுள்ளது. இதற்காகஅதிமேதகு ஜனாதிபதிஅவர்களின் வழிகாட்டலின் கீழ் பணஒதுக்கீடுகள் செய்யப்படுவதோடுஅதற்குத் தேவையான இயந்திரங்களும் ஏனைய வசதிகளும் எமதுஅமைச்சினால் வழங்கப்படுகின்றன.

மேலும் பின்தங்கியபிரதேசசபைகளின் உட்கட்டமைப்புவசதிகளைமேம்படுத்துவதற்காக 2014ஆம் ஆண்டின் வரவுசெலவுதிட்டத்தில் அதிமேதகு ஜனாதிபதிஅவர்கள் முன்மொழிந்ததற்குஏற்றவாறு இவ்வருடம் சுமார் 10,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதொகையினைஒதுக்கீடுசெய்துபிரதேசசபைகளுக்குவழங்குவதற்காக இயந்திரஉபகரணங்கள் தருவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இன்னும் தங்களுடையஅன்றாடசெலவினங்களுக்குக்கூட முகம்கொடுக்கமுடியாதுள்ளபிரதேசசபைகள் இனங்காணப்பட்டுமாதத்திற்கு 10 இலட்சம் ரூபாவீதம் இவ்வருடத்தில் 12 மில்லியன் ரூபாய்களைஅச்சபைகளுக்குபெற்றுக்கொடுப்பதற்குஏற்றவாறு ஜனாதிபதிஅவர்கள் முன்மொழிந்ததற்கேற்பபிரதேசசபைகள் பணத்தினைப் பெற்றுக்கொள்கின்றன.

மொத்தத்தில் அதிமேதகு ஜனாதிபதிஅவர்களுடையஆட்சிக்காலம் உள்ளூராட்சிசபைகளின் வசந்தகாலம் என்றுஉள்ளூராட்சிசபைகளின் தலைவர்கள் அடிக்கடிகுறிப்பிடுவதனை இங்குசுட்டிக்காட்டுவதில் பெருமையடைகின்றேன்;.

இம்மாநாட்டில் சுவர்ணபுரவரவிருதுகளைப் பெற்றஉள்ளூராட்சிசபைகளினதுதலைவர்கள்,மக்கள் பிரதிநிதிகள்,ஊழியர்கள் அனைவருக்கும் என்னுடையஉளம் கனிந்தபாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.எனஅமைச்சர் தனதுரையில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :