கல்முனை மாநகரப் பிரதேசங்களில் வெள்ள அனர்த்த்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசரக் கூட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது.
மாநகர முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், எதிர்க் கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம், உறுப்பினர்களான ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எச்.நபார, சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தற்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டிருப்பதால தொடர்ந்தும் மழை பெய்யுமாயின் கல்முனை மாநகரப் பிரதேசங்களை வெள்ள அனர்த்த்தத்தில் இருந்து பாதுகாப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இதற்காக ஆளணி மற்றும் வளங்களை அதிகரிப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு அவை தொடர்பில் சில தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
வெள்ள அனர்த்த காலங்களில் எமது பிரதேசங்களையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அதிகாரிகளும் ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று முதல்வர் நிஸாம் காரியப்பர் இதன்போது வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
.jpg)
0 comments :
Post a Comment