நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பினால் பாராட்டு விழா

எம்.எம்.ஜபீர்-

ற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப 12.30 மணிக்கு நற்பிட்டிமுனை கமு/கமு/அல்-அக்ஸா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் பாடசாலையின் பழைய மாணவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் (பா.உ) அவர்களின் கல்முனைத் தொகுதி இணைப்பாளரும், அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின் தலைவருமான சீ.எம்.ஹலீம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கமு/கமு/அல்-அக்ஸா மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சீ.எம்.முபீத், கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பள்ளிவாசல் பரிபாலன சபை தலைவர் மௌலவி ஏ.எல்.நாஸீர்கனி, கல்முனை வலயக் கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளர் அல்ஹாஜ் இஸட்.எம்.நதீர், கமு/லாபிர் வித்தியாலய அதிபர் ஜெஸ்மினா ஹாரீஸ், கமு/கமு/அல்-அக்ஸா மகா வித்தியாலய பிரதி அதிபர் வி.எம்.ஸம்ஸம், உதவி அதிபர்களான மௌலவி ஏ.எம்.சாலிதீன், எம்.முனாசிர் ஆசிரிய ஆலோசகரும் பி.எஸ்.ஐ. இணைப்பாளருமான எஸ்.சிறாஜூதின், பாடசாலை அபிவிருத்தி சங்கம், படசாலை அபிவிருத்திக் குழு, பாடசாலை முகாமைத்துவக் குழு மற்றும் பழைய மாணவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இதன்போது புலமைப் பரிசில் பரீசட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் பணப்பரிசு, நினைவுச் சின்னம் மற்றும் பரிசுப்பொதிகளும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாக அமைப்பின் செயலாளரும் கமு/கமு/அல்-அக்ஸா மகா வித்தியாலய பழைய மாணவருமான யூ.எல்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :