பாலமுனை மரண உபகார நிதியத்தினால் பல்வேறு சேவைகள் அங்குரார்ப்பண நிகழ்வுகள்!

பி. முஹாஜிரீன்-

பாலமுனை மரண உபகார நிதியத்தினால் பாலமுனை பொது அடக்கஸ்தல மேம்பாட்டுக்கென பல்வேறு சேவை நலத் திட்டங்கள் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை மாலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

நிதியத்தின் தலைவர் ஐ.பி.எம். ஜிப்ரி தலைமையில் பாலமுனை பொது அடக்கஸ்தல சதுக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாலமுனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாயல் தலைவர் எம்.சி. மஹ்றூப் உட்பட பொது நல அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இதில் பாலமுனை பொது அடக்கஸ்தல சுற்று மதிலுக்கு வர்ணம் பூசும் பணியினை ஆரம்பித்தல், பொது அடக்கஸ்தல வளாகத்தை சிரமதானப் பணி மூலம் துப்பரவு செய்தல், அடக்கஸ்தலத்தில் இரவு வேளையில் ஜனாஸா பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) வசதி பெற்றுக் கொள்ளல், அடக்கஸ்தலத்தில் மார்க்கச் சொற்பொழிவை மேற்கொள்வதற்கு வசதியாக கையடக்க ஒலிபெருக்கி கையேற்றல், அவசர மரணங்களின்போது பயன்படுத்தவதற்கென கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஜனாஸா வாகனத்தின் புனரமைப்பிற்கான நிதிக் கொடுப்பனவு மற்றும் சிறுவர் ஜனாஸா உபகார உதவி அங்குரார்ப்பணம் போன்ற பல்வேறு சேவைத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இச் சேவைத் நலத் திட்டங்கள் பாலமுனை பிரதேசத்திலுள்ள தனவந்தர்கள் மூலமும் மற்றும் பொது அமைப்புக்கள் மூலமும், மாணவக் குழுக்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்கள் மூலமும் உதவியாக வழங்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கட்டாரில் தொழில்புரியும் பாலமுனை வாழ் சகோதரர்களின் அமைப்பான அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பினால் ஜனாஸா வாகன புனரமைப்பிற்கென ரூபா 91 ஆயிரம் நிதி அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :