எம்.ஏ.தாஜகான்-
பொத்துவில் பிரசேத்தில் பிரதேசசபை நிதிமூலம் புனரமைக்கப்பட்டு, அண்மையில் பிரதேசசபைத் தவிசாளர் சகிதம் திகாமல்ல பாராளுமன்ற உறுப்பினரால், பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு. போக்குவரத்திற்காக மக்களிடம்; ஒப்படைக்கப் பட்ட உள்வீதிகளே, தற்போதுபெய்துவரும் அடைமழையில் அள்ளுண்டுபோயுள்ளது.
கடந்த இருவாரகாலமாக நாட்டின் பல பாகங்களில் பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை 5 மாவட்டங்களில் சுமார் 700 வரையிலான குடும்பங்களைச சேர்ந்த 2500 பேர்வரை நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, கடந்த 3ஆம் திகதிவரை நாட்டின் 14 மாவட்டங்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களின்போது, 3 இலட்சத்து 78 ஆயிரத்து 556 குடும்பங்களைச் சேர்ந்த 13 இலட்சத்து, 20 ஆயிரத்து 779 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித் துள்ளது.
இந்நிலையில், இவ்வீதிகள் அடைமழையில் அள்ளுண்டு போகின்றமை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பி-7 கிராமசேவகர் பிரிவு பொதுமக்கள், அவசர அவசர மாகக் கிரவல் போடப்பட்டு நிரப்பப்படுகின்ற இவ்வீதிகள் அடுத்துவரும் அடை மழையில் நிச்சயம் அள்ளுண்டுபோகும் எனத்திறப்பு விழாவின்போது, பாராளுமன்ற உறுப்பினரிடமும், பிரதேசசபைத் தவிசாளரிடமும் கூறியுள்ளதாகவும் மேலும் தெரி வித்தனர்.
0 comments :
Post a Comment