மஹிந்த சிந்தனை செயற்றிட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டின் கீழ் கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் கடமையாற்றும (திவிநெகும) வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் மோட்டார் சைக்கிள் வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசர மகஜர் ஒன்றினை அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்க (தற்போது வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்) அம் மாவட்ட தலைவர் ஐ.எச்.அப்துல் வஹாப் அனுப்பி வைத்துள்ளார்.
அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மஹிந்த சிந்தனை செயற்றிட்டத்தின் கீழ் அரசின் அபிவிருத்தித் திட பாரை மாவட்ட கிளையின் மாவட்ட தலைவர் ஐ.எச்.அப்துல் வஹாப் அனுப்பி வைத்துள்ளார். திட்டங்களை செயற்படுத்தும் பணியில் வெளிக்களத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த எந்த ஒரு அரசும் செய்யாத இந்த வகையில் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு தீர்வையற்ற மோட்டார் சைக்கில் வழங்கும் வேலைத் திட்டத்தை செயற்படுத்துவதற்காக முதலில் எங்களது சங்கத்தின் சார்பில் தங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடந்த காலங்களில நடைபெற்ற தேர்களின்போது எமது சங்கமும் உத்தியோகத்தர்களும் தங்களது அரசின் வெற்றிக்காக பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் அர்ப் பணிப்புடனும், விசுவாசத்துடனும் செயற்பட்டவர்கள் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். எதிர் காலத்திலும் எமது ஆதரவும், ஒத்துழைப்பும் தங்களுக்கே என்பதை மகிழச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எதிர் காலத்தில் நீங்கள் திருகோணமலை மாவட்டத்திற்கு வருகை தருகின்ற சந்தர்ப்பத்தில் திருகோணமலை மாவட்ட அனைத்து வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும், அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கும் மோட்டார் சைக்கில் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.
இதனுள்; அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடமையாற்றும்; வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளடக்கப்படாமை எமக்குக் கவலையையும், மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக மாவட்ட செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது இதுஅரச, பொது நிருவாக பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
எனவே, எப்போதும் உங்களுக்கு ஆதரவு வழங்கி வரும் அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களில் கடமையாற்றும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் திருகோணமலையில் தாங்கள் மோட்டார் சைக்கில் வழங்கும்போது மோட்டார் சைக்கில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மிகவும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என்று அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment