யாரிடம் ஒப்படைப்பது. பொத்துவில் மின் பாவனையாளர்கள் திண்டாட்டம்

எம்.அனஸ் - பொத்துவில்-


பொத்துவில் உப மின்நிலைய மின் பாவனையாளர்களுக்கு, இலங்கை மின்சார சபையின் அம்பாறை பிரதேச மின் பொறியியலாளர் காரியாலயத்தினால், வாடிக் கையாளர் தகவல் திரட்டும் படிவம் ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. 

அப்படிவத்தைப் பூரணப்படுத்தி யாரிடம் ஒப்படைப்பதெனத்தெரியாது திண்டாடுவதாக பொத்துவில் உப மின் நிலைய மின் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சேவையின் தரத்தை உயர்த்துதல்,பராமரிப்பின் பொருட்டு மின் துண்டிப்பு, மின் கட் டணம் செலுத்தப்படாமைக்கான மின் துண்டிப்பு மற்றும் அத்தியாவசியத் தகவல் களை உடனுக்குடன் தருவதற்காக இத்தகவல்கள் திரட்டப்படுவதாக அப்படிவத் தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணக்கு மற்றும் வளாக இலக்கம், போக்குவரத்து அமைப்பு, முதலெழுத்துடன் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், நிலையான மற்றும் கையடக்க தொலைபேசி இலக்கம், மின் அஞ்சல் முகவரி முதலான விபரங்கள் அப்படிவத்தில் கோரப்பட்டுள்ளது.

இப்படிவத்தைப் பூர்த்தி செய்து, எங்களது மின்மானி வாசிப்பாளரிடம் ஒப்படைக் குமாறு அப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்மானி வாசிப்பாளரோ கொச்சைத் தமிழில் உப மின் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறி அப்படிவங்களை மின் பாவனையயாளர்களிடம் கொடுத்துச் செல்கிறார்.
அல்லது அம்பாறை பிரதேச மின் பொறியியலாளர் காரியாலயத்தின் தபால் முக வரிக்கோ, மின் அஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படிவத்தை, மின்மானி வாசிப்பாளரிடமா, உபமின் நிலையத்திலா, பிரதேச மின் பொறியியலாளர் காரியாலய முகவரிக்கா அனுப்புவதென்று தெரியாது திண்டாடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட செய்தி சம்மந்தமாக இம்போட்மிரர் இணையத்தளம் மின்பொறியியலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அப்படிவம் பூரணப்படுத்தி ஒவ்வொரு வீடுகளுக்கும் மின்பட்டியல் தருவதற்காக மின்சார சபையில் இருந்து வருபவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :