ஜமாலியா இளைஞர் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு

பஹ்மி யூஸூப்-

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 26வது தேசிய விளையாட்டு விழா - 2014 இன்  உதைப்பந்தாட்டப் போட்டியில் திருகோணமலை மாவட்ட மட்டப் போட்டியில் பங்குபற்றி  முதலாம் இடம் பெற்ற ஜமாலியா இளைஞர் விளையாட்டுக் கழகம் திருகோணமலை தேசிய இளைஞர்  சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர் ஏ.ஹமீர் அவர்களின் வழிகாட்டலில் திருகோணமலை  பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ.எல்.அலாவுதீன் பாபு அவர்களின் தலைமையில்  சென்று ஒக்டோபர் மாதம் 11, 12ஆம் திகதி பதுளையில் நடைபெற்ற போட்டிகளில்  குருநாகல் 02 : 00, வவுனியா 02 : 00, யாழ்ப்பாணம் 02 : 01, அம்பாறை 02 : 00 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று நவம்பர் மாதம் ஹம்பாந்தோட்டை பெலியத்த  விளையாட்டு அரங்கில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில்  பங்கேற்பதற்கு தெரிவாகயுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :