இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமானமுறையில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவர் உட்பட இருவரை இன்று கல்முனை பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கல்முனை கல்முனைக்குடி பகுதியில் சம்பவதினமான இன்று (09) காலை 9.30 மணியளவில் சுற்றுலா விசாவில் வந்து வீடுவீடாக புடவைகளை விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் நாடு மகராஜ்புரம் விருதுநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சரவணகுமார் ராஜேஸ்வரி, 36 வயதுடைய பெருமாள் முருகன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை இன்று கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப’பட்டுள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment