அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் ஓய்வு பெற்றுச் செல்லும் கல்வி அதிகாரிகளின் பிரியாவிடை வைபவம்

 அனாசமி-

க்கரைப்பற்று கல்வி வலயத்தில் நீண்டகாலமாக ஆசிரிய ஆலோசகர்களாகப் பணியாற்றி ஓய்வுபெறுகின்ற கல்வியாளர்களுக்கான பிரியாவிடை வைபம் நேற்று(08.10.2014) இரவு பொலநறுவையிலுள்ள விலேஜ் உல்லாச விடுதியில் இடம்பெற்றது. அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் வலயக் கல்விப்பணிப்பாளர் அஷ்சேஹ் ஏ.எல்.எம். காசீம் தலைமையில், பிரதிக் கல்விப்பாளர் ஏ.எஸ். அகமட் கியாஸ் அவர்களின் நெறியாள்கையின் கீழ் மிகவும் சிறப்பானமுறையில் இந்நிகழ்வு நடந்தேறியது.

இதில், ஓய்வுபெற்றுச் செல்கின்ற முறைசாரக் கல்வி ஆசிரிய ஆலோசகரான அல்ஹாஜ். என்.சம்சுதீன், சமூகக்கல்விப் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் எம்.எல்.எம்.இப்றாகீம், ஆங்கிலப் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம். இப்றாகீம் ஆகியோருக்கு பொன்னாடை, பொற்கிழி, நினைவுப் பரிசுகள் என்பன வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர். இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர், அட்டாளைச்சேனை, பொத்துவில் ஆகிய கோட்டங்களின் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பொத்துவில் உப கல்வி வலயத்தின் பணிப்பாளர் ஏ. அப்துல் அஸீஸ், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பொன்னாடை போர்த்தி, பொற்கிழி வழங்கி, நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்ட ஆசிரிய ஆலோசகர்கள், வலயக் கல்விப்பணிப்பாளர், பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆகியோரையும் நிகழ்வில் கலந்து கொண்ட கல்வி அதிகாரிகளையும் படங்களில் காணலாம்..




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :