பழுலுல்லாஹ் பர்ஹான்-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் வடமாகாண மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மேற்படி மீளாய்வுக் கூட்டம் இன்றைய தினம் (13) இடம்பெற்றது.
இதில் அமைச்;சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்த அறிக்கைகளை அந்தந்த மாவட்டங்களின் அரச அதிபர்கள் சமர்ப்பித்தனர்.
இதில் மீள்குடியேற்றம், விவசாயம், கடற்றொழில், வாழ்வாதார உதவித்திட்டங்கள், உட்கட்டுமானம் அபிவிருத்தி செயற்திட்டங்கள் வடமாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் வடக்கின் வசந்தம் மின்சாரம், வீதிப் புனரமைப்பு, கைத்தொழிற்துறைகள், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், விளையாட்டு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் முன்னேற்றங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இவ்விசேட அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, றிசாட் பதியூதீன் உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமாhர், பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி, வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா உள்ளிட்டவர்களுடன் பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச திணைக்களங்களின் அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment