கொழும்பில் அமைந்துள்ள சங்கீதம்,பேச்சு,நாடகம் ஆகியவற்றிற்கான சர்வதேச கல்வி நிறுவனத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா 12-10-2014 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
சங்கீதம்,பேச்சு,நாடகம் ஆகியவற்றிற்கான சர்வதேச கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி .ஜோய் பெர்டினாண்டோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பீகாஸ் சிட்டி கெம்பஸின் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் கலந்து கொண்டார்.
இதன் போது குறித்த கல்வி நிறுவனத்தில் சங்கீதம்,பேச்சு,நாடகம் போன்ற பாடநெறிகளை பூரத்தி செய்த மாணவ மாணவிகளுக்கு நிகழ்வின் பிரதம அதிதி பீகாஸ் சிட்டி கெம்பஸின் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மானினால் சான்றிதழும்,கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment