பாலத்தடிச்சேனை நாகதம்பிரான் ஆலயத்தில் திருட்டி: வன்மையாக கண்டிக்கின்றேன் -யோகேஸ்வரன் எம்.பி

த.நவோஜ்-
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் பாலத்தடிச்சேனை நாகதம்பிரான் ஆலயத்தில் பல பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சில காடையர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

 அத்தோடு மின் பிறப்பாக்கி இயந்திரமும் களவாடப்பட்டுள்ளதையிட்டு மிகவும் வன்மையான கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், மதவிவகாரங்களுக்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொறுப்பாளருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்!

இப்பகுதியில் மூன்று தினங்களுக்கு முன் இவ்வாலயத்தில் அருகில் உள்ள முருகன் ஆலய கொடித்தம்பப் பிள்iயார் உடைக்கப்பட்டது. தற்போது சென்ற வருடம் கும்பாபிடேகம் பெற்று ஒரு வருட பூர்த்தியை இட்டு விசேட பூசை கிரியைகள் ஒழுங்குபடுத்த தீர்மானித்த வேளை இச்சம்பவம் நடந்துள்ளது.

இவ்வேளையில் இவ்விரு ஆலயத்தின் மிக அருகாமையிலேயே இராணுவ சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் நடைபெற்ற இக்களவு சார்பாக பொது மக்கள் பெரும் சந்தேகங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிகழ்வு சர்பாக தீவிர விசாரணையை மேற்கொள்வதுடன், இவ்வாறான அச்சுறுத்தல் செயற்பாடான இந்து ஆலயங்கள் உடைக்கும் தொழிற்பாடுகளை தடுத்து நிறுத்துவதுடன், இச்செயல்களை மேற்கொண்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பொலிஸாரை கேட்டுள்ளதாக தனது கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :