தபால் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக தபால் அதிபர்களுக்கு அது தொடர்பான உற்பத்தித் திறன் கருத்தரங்கு இன்று 12 (ஞாயிற்றுக்கிழமை) மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் ஆர்.எம்.எம். ரூபசுந்தர பண்டா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அஞ்சல் மா அதிபர் வி. விபுகானந்த லிங்கம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இக்கருத்தரங்கில் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட அஞ்சல் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தபால் திணைக்களத்தின் உற்பத்தித்திறன் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப வசதிகள் போன்றவை தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் அலுவலக பிரதம இலிகிதர் யூ.எல்.எம். பைசல், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். மதிகானன், கணக்காளர் எச்.எம்.றசீட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment