அனர்த்தப் பாதுகாப்புத் தொடர்பாக அட்டாளைச்சேனை மனித எழுச்சி நிறுவனத்தின் செயலமர்வு



பி. முஹாஜிரீன்-

னர்த்தப் பாதுகாப்புத் தொடர்பாக அட்டாளைச்சேனை மனித எழுச்சி நிறுவனத்தின் (எச்.ஈ.ஓ) அனுசரனையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமிய அனர்த்த முகாமைத்துவக் குழுக்களுக்கான முதலுதவிப் பயிற்சிச் செயலமர்வு  பாலமுனை மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

மனித எழுச்சி நிறுவனத்தின் இணைப்பாளர் கே. நிஹால் அஹமட் தலைமையில் நடைபெற்ற இவ் ஒரு நாள் முதலுதவிப் பயிற்சிச் செயலமர்வில் அனர்த்த முகாமைத்துவ அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், இலங்கை செஞ்சிலுவைச் சங்கப் பணிப்பாளர் என். சசிகரன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இடி மின்னல் தாக்கம், வெள்ளப் பெருக்கு, சூறாவளி, மண்சரிவு மற்றும் சுனாமி போன்ற அனர்த்தங்கள் தொடர்பாகவும் இவ் அனர்த்தங்களிலிருந்து எவ்வாறு தங்களையும் தங்களது உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பாகவும், இவற்றினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு எவ்வாறான முதலுதவி சிகிச்சைகள் வழங்குவது என்பது தொடர்பாகவும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.

இப்பயிற்சிச் செயலமர்வில் அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த கிராமிய அனர்த்த முகாமைத்துவக் குழுக்களின் பிரதிநிதிகளும் உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :