காத்தான்குடி முஸ்லீம் மீடியா போரம் ஏற்பாடு செய்த கிழக்குமாகாண ஊடகவியலாளர் ஒன்று கூடல்

அபூ இன்ஷாப்-

புனித ஹஜ்ஜூப் பெருநாளையிட்டு காத்தான்குடி முஸ்லீம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண முஸ்லீம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும் 2014.10.07ம் திகதி பிற்பகல் 3.00 மணி தொடக்கம் மறுநாள் 08ம் திகதி அதிகாலை 5.15 வரைக்கும்  காத்தான்குடி கடற்கரையோரத்திலுள்ள ஜூமைறா பெலஸில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

'முழு நிலவில்'; நடைபெறவுள்ள இந்த ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் நிகழ்வில் உரையரங்கம், கவிதையரங்கம், நகைச்சுவை அரங்கம் போன்ற பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் பரிசில்கள ;மற்றும் அன்பளிப்புக்கள் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

இந்த ஒன்று கூடலில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் கடிதங்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லீம் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி முஸ்லீம் மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.எம்.ஜெலீஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :