பழுலுல்லாஹ் பர்ஹான்-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அங்கீகாரத்தில் அம்பாறை மாவட்டத்தில் இவ் வருடம் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னெற்ற விஷேட மீளாய்வு கூட்டம் 03-10-2014 இன்று வெள்ளிக்கிழமை இம் மாவட்ட செயலக பிரதான கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பிரதிநியாக கலந்து கொண்ட பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இவ் விஷேட கூட்டம் நடைபெற்றது.
இதன் போது இம் மாவட்டத்திற்கு இவ் வருடம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடான 1274 மில்லியின் ரூபாய் செலவில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னெற்றங்கள் மற்றும் தாமதங்களை தவிர்த்து விரைவாக திட்டங்களை பூரத்தி செய்வதற்கான முன்மொழிவுகளும் ஆராயப்பட்டன.
இவ் விஷேட கூட்டத்திற்கு தொழில் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர ,திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரீ.ஹசனலி,பி.எச்.பி .பியசேன,திருமதி எஸ்.சிரியானி விஜயவிக்ரம ,கிழக்கு மாகாண கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விமல வீர திசாநாயக்க,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசன அமைச்சர் எஸ்.எச்.உதுமாலெப்பை,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல்டி அல்விஸ்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இனைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின் உள்ளுராட்சி மன்றத்தின் தலைவர்கள் மற்றும் உள்ளுர் திணைக்களங்களின் தலைவர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இங்கு திவிநெகும வாழ்வின் எழுச்சி வாழ்வாதார அபிவிருத்தி வேலைத் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடுலான வேலைத் திட்டங்கள் ,கிராமத்துக்கு ஒரு வேளைத் திட்டம் ,கிராமிய பாடசாலை அபிவிருத்தி,வன ஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் ,கமநெகும ,கிராமிய அபிவிருத்தி உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இம் மாவட்டத்தில் இவ் வருடம் அமுல்படுத்தப்பட்டுவருவதாக மாவட்ட திட்டமில் பணிப்பாளர் அன்வர்டீன் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment