அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் காரியாலயம் நடாத்திய மகா போக விவசாயக் கண்காட்சி




பி. முஹாஜிரீன்-

ட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் காரியாலயம் மற்றும் 'சபாஅத'; இளம் விவசாயிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மகா போக விவசாயக் கண்காட்சியும் விற்பனையும் 2014ஃ2015ம் நிகழ்வு அட்டாளைச்சேனை உதவி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (25) சனிக்கிழமை நடைபெற்றது.

விவசாய விரிவாக்கற் உத்தியோகத்தர் ஏ.எச்.ஏ. முபாறக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகளாக அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ், உதவி விவசாயப் பணிப்பாளர் ஏ.எல். சனீர் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியையும் விற்பனையையும் ஆரம்பித்து வைத்தனர்.

விவசாயத் திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதை நெல் இனங்கள், பயிர் விதைகள் மற்றும் கிருமி நாசினிகள் போன்றவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டதோடு விவசாயிகளுக்கு புதிய தொழிநுட்ப ரீதியிலான மாதிரி செய்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

இதில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்குபற்றியதுடன் விவசாயிகளும் பெரும் பயன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :