சாட்சியாளர்களின் பாதுகாப்பு சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
அதன் பிரதான செயலாளர் வசந்த பண்டார இதனைக் கூறியுள்ளார்.
குறித்த சட்ட மூலத்துக்கு அண்மையில் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.
இந்த நிலையில் அது விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில், அதன் மூலம் குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்படுகின்ற மனுக்களின் அடிப்படையில், அரச அதிகாரிகள், காவற்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு குற்றவாளிகளாக மாற்ற முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment