எந்தக் காரணத்திற்காகவும் தமது பிள்ளைகளை சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு தற்போது அனுப்ப வேண்டாம் என அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பெற்றோர்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
தற்போது பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், எனவே மறு அறிவித்தல் வரை மாணவர்களை அனுப்ப வேண்டாம் எனவும் உபவேந்தர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று சத்தியாக்கிரகம் இருந்த மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று காலை வரை சுமார் 20 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment