மஹிந்த ராஜபக் ஷ ஐந்திற்கு மேற்பட்ட தடவைகள் ஜனாதிபதியாக இருப்பதற்கு மக்களின் ஆதரவு இருக்கின்றது!

னா­தி­பதி மகிந்த ராஜபக் ஷ இரண்டு தட­வை­யல்ல ஐந்து தட­வை­க­ளுக்கு மேல் ஜனா­தி­ப­தி­யாக இருப்­ப­தற்கு மக்­களின் ஆத­ரவும் ஒத்­து­ழைப்பும் என்றும் இருக்­கின்­றது என கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்த்­தன தெரி­வித்தார்.

கந்­தளாய் அல்­தாரிக் மகா வித்­தி­யா­ல­யத்தில் கல்வி அமைச்சின் கீழ் உள்ள மஹிந்­தோ­தய தொழில்­நுட்ப கூடத்­தி­றப்பு விழா நேற்று நடை­பெற்­றது. 

இந்­நி­கழ்வில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;இன்­றைய நாள் உங்கள் வர­லாற்றில் பதிக்­கப்­பட வேண்­டிய ஒரு நாளாக காணப்­ப­டு­கின்­றது. ஏனென்றால் ஒரு நாட்டின் தலை­வ­ரான ஜனா­தி­பதி உங்கள் கிரா­மத்­திற்கு வந்து உங்­களை சந்­தித்து விட்டு செல்­கின்ற நாளாகும். 

ஆயிரம் பாட­சாலை அபி­வி­ருத்தி திட்­டத்தின் கீழுள்ள உங்­க­ளு­டைய பாட­சா­லையும் மஹிந்­தோ­தய தொழில்­நுட்ப கூடத்­தினை அமைத்து திறந்து வைப்­பதில் நாம் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம்.

இலங்கை திரு­நாட்­டிலே அதி­க­மா­ன­வர்கள் சிங்­க­ள­வர்­களே கல்வி அமைச்­சர்­க­ளாக இருந்திருக்­கின்­றார்கள். ஆனால், சிறி­மாவோ பண்­டார நாயக்க அம்­மை­யாரின் ஆட்­சிக்­கா­லத்தில் ஒரு தடவை பதி­யுதீன் மஹ்மூத் கல்வி அமைச்­ச­ராக இருந்து இருக்­கின்றார். அந்த கால ­கட்­டத்தில் கல்வி வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதும் தொழில்­நுட்ப விட­யங்கள் இன்னும் பின்­ன­டைந்த நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. 

ஆனால், கிரா­மப்­புற பாட­சா­லை­க­ளிலும் நகர் புற பாட­சா­லை­க­ளிலும் மஹிந்த சிந்­தனை தொலை­நோக்கு திட்­டத்தின் கீழ் பல்­வேறு வகை­யான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :