அஸ்லம் எஸ்.மௌலானா-
சாய்ந்தமருது கடற்கரைப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பீச் பார்க் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 66 ஆவது பிறந்த தினமான நாளை ஒக்டோபர் 23 ஆம் திகதி வியாழக்கிழமை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு நிர்மாண வேலைகள் இரவு பகலாக மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் கடந்த சில திங்களாக களத்தில் நின்று இதற்கான அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றார்.
இந்த பீச் பார்க்கிற்கு தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா என பெயர் சூட்டப்பட்டு- அவரது பிறந்த தினத்தில் திறந்து வைக்கப்படுவது சிறப்பம்சமாகும்.
இந்த பீச் பார்க்கின் நிர்மாண வேலைகள் கடந்த 2011ஆம் ஆண்டு ஆரமிக்கப்பட்டு இடைநடுவில் கை விடப்பட்டிருந்தது. எனினும் கடந்த ஆண்டு கல்முனை மாநகர முதல்வராக நிஸாம் காரியப்பர் பதவியேற்றதைத் தொடர்ந்து அதன் நிர்மாண வேலைகளில் இருந்து வந்த சட்டப் பிரச்சினைகள் மற்றும் குளறுபடிகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு- மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு- மீண்டும் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் இந்த நிர்மாண வேலைகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வந்தன. இதனால் கடந்த சில மாதங்களாக அடிக்கடி களத்திற்கு விஜயம் செய்தும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்கள் நடாத்தியும் நிர்மாண வேலைகளை துரிதப்படுத்துமாறு ஒப்பந்தக்காரருக்கு பல தடவைகள் முதல்வர் கண்டிப்பான உத்தரவிட்டு வழி நடாத்தியதன் பேரில்லேயே இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது.
எவ்வாறாயினும் இப்பணிகள் நிறைவடைவதற்கு இன்னும் சில வாரங்கள் எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த பீச் பார்க்கிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் பெயரை சூட்டி அவரது 66 ஆவது பிறந்த தினமான நாளை ஒக்டோபர் 23 ஆம் திகதி வியாழக்கிழமை இதனை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைப்பதற்கு முதல்வர் தீர்மானித்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
இதன் பிறகு மிகுதி வேலைகளும் பூரணப்படுத்தப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இந்த பீச் பார்க் மக்கள் பாவனைக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
நாளைய திறப்பு விழாவுக்காக முதல்வர் நிஸாம் காரியப்பரின் நேரடி கண்காணிப்பில் கடந்த சில தினங்களாக இரவு பகலாக நிர்மாண வேலைகள் மிகவும் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று காலை தொடக்கம் கிழக்கு மாகாண சபை மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் ஆகியோரும் முதல்வருடன் களத்தில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment