பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ.தாஜகான்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு இன்னும் 2 வருடங்கள் இருக்கின்ற பொழுது மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக மீண்டும் வருவதற்கு ஜனாதிபதித் தேர்தலை நடாத்தத் திட்டம் தீட்டியிருப்பது வரலாற்றுத் துரோகமாகும்.இந்த வரலாற்றுத் துரோகத்திற்கு சாதகமாக வித்திட்டவர்கள் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களாவார்கள். என்று கொழும்பு மாநகரசபை முதல்வர் ஏ.ஜே.முசம்மில் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேசத்தின் ஜக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் (எஸ்.எஸ்.பி) எம். அப்துல் மஜீத் அவர்களின் தலைமையில் நடை பெற்ற ஜக்கிய தேசிய கட்சியின் மத்திய குழுவினருக்கான அரசியல் விழிப்பூட்டும் கருத்தரங்கு இன்று 2014.10.22 பொத்துவில் ஜக்கிய தேசிய கட்சியின் வள நிலையத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் பொழுதே தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றும் பொழுது.
ஜக்கிய தேசிய கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது ஏனென்றால் ராஜபக்ஸ குடும்பத்தின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் என்பதை மறந்து விடாதீர்கள். பாதிக்கப்பட்ட வட கிழக்கு முஸ்லிம்களுக்காக அரபு நாட்டு நிதியில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினை மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாத அரசாங்கம்தான் இன்று ஆட்சி செய்கின்றது.
இம்முறை தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவதற்கு காரணம் அமைச்சுப்பதவிகளுக்கோ அல்லது கொந்தராத்து வேலைகளுக்காகவோ அல்ல சிறுபான்மையினரின் உரிமையை பெற்றுக் கொடுக்கும் தலைவனை தெரிவு செய்வதற்காகவேதான். கலிமா சொன்ன எந்த முஸ்லிமும் மகிந்த ராஜபக்ஸவை ஆதரிக்க மாட்டார்கள்.
மாகாண சபை மூலம் மரத்தில் போட்டியிட்டு அரசுக்கு தாரைவார்த்து இலங்கையில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளை மூடி மறைக்கும் திட்டத்தினை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்து வந்ததை நாம் அறிவோம். இந்த விளையாட்டுக்கு நாம் சோரம் போகாமல் ஜக்கிய Nதிய கட்சியினை ஆதரித்து எமது உரிமைகளை வென்றெடுக்க முயற்சிக்க வேண்டும். என்றார் .
இந் நிகழ்வில் ஜக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றும் பொழுது
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள் அன்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகின்ற பொழுது இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன் என்று கூறியவர் மீண்டும் அரசாங்கத்தோடு ஒட்டியிருப்பது என்ன நியாயம். முஸ்லிம்களால் அளிக்கப்படும் வாக்குகளினால் முஸ்லிம் சமூகத்துக்கு விபரீதம் வந்து விடக்கூடாது.ஹக்கீம் அதாவுல்லாஹ் ரிசாத் ஆகியோர்கள் வெட்கம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் முஸ்லிம்கள் வெட்கவுணர்வு கொண்டவர்கள் என்பதை ஜனாதிபதியை மாற்றியமைப்பதன் மூலம் நிருபிக்க வேண்டும்.
இன்று தொடர்ச்சியாக அரங்கேறும் மதஸ் தலங்களின் உடைப்புக்கள் பெண்களின் மானத்தோடு விளையாடும் ஹபாயா ஆடைக்கான அச்சுறுத்தல் ஸரீஅத் சட்டத்தை தடை செய்ய முனைதல் போன்ற நிகழ்வுகளின் பின்னரும் நாம் இந்த அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டுமா? என்றார் முஜிபுர் ரஹ்மான்.
இந் நிகழ்வில் தவிசாளர் கபீர்காசிம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப் கலபத்தி கண்டி மாநகர சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியார் ஆகியோரும் கலந்து உரையாற்றியமை குறிப்பிடததக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment