ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிந்தனையில் உருவான 'திவிநெகும' வேலைத்திட்டத்தின் ஆறாம் கட்டபிரதான நிகழ்வு நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ. பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசன் அலியின் பிரத்தியேகச் செயலாளர் எம்.ரி.ஜப்பார் அலி, நிந்தவூர் பிரதேச கமநலசேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஹார்லிக், நிந்தவூர் பிரதேச கால் நடை வைத்திய அதிகாரி டாக்டர்.ஏ.தையூபா, மாவட்ட வைத்திய அதிகாரி ஆக்கீல் அஹமட், உதவிப்பிரதேச செயலாளர் எஸ். திரவியராஜ், அம்பாரை மாவட்ட விவசாய உதவிப் பணிப்பாளர் எம்.அலியார் உள்ளிடட்ட உயரதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்வில் மரக்கன்றுகள் நடப்பட்டதோடு, தோட்டப்பயிர்ச் செய்கையாளர்களுக்கு இலவசமாகவும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment