மின்சார சபை ஊழியர் மீது தும்புத்தடியால் தாக்கிய பெண்ணொருவர் பொலிசாரால் கைது

மூன்று மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தாத வீட்டின் மின் இணைப்பைத் துண்டிக்கச் சென்ற மின்சார சபை ஊழியர் மீது பெண் ணொருவர் தும்புத்தடியால் தாக்கியுள்ளார்.

இங்கிரிய பகுதியில் உள்ள வீடொன்றுக்குச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றது. இங்கிரிய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் பெண்ணை கைது செய்துள்ளனர். மூன்று மாதங்களாக மின்சாரக் கட்டணம் 11,763 ரூபா செலுத்தாததால் இங்கிரிய கிரிகல பகுதியில் உள்ள வீடொன்றின் மின்சார விநியோகத்தை துண்டிப்பதற்காக மின் சார சபையின் ஊழியர் குழுவினர் சென்றுள்ளனர்.

அவர்களுள் ஒருவர் மீது பெண் தாக்கியுள்ளார். இங்கிரிய பொலிசில் செய்யப்பட்ட முறைப் பாட்டினையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிரிய பொலிஸார் மேலதிக புலன் விசாரணைகளை மேற்கொண் டுள்ளனர்.thinakaran
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :