இறக்காமத்திலிருந்து நைனாகாடு ஊடாக கல்முனைக்கு புதிய பஸ் சேவை ஆரம்பம்






இறக்காமம் எஸ்.எம். சன்சீர்-

றக்காமம் பிரதேச சபையின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் அவர்களின் அயராத உழைப்பினால் சம்மாந்துறை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து இன்று முதல் இறக்காமம் ஆலையடி சந்தியில் இருந்து நல்லதன்னிமலை, மாணிக்கமடு, குடுவில், நைனாகாடு, சம்மாந்துரை ஊடாக கல்முனை வரை புதிய போக்குவரத்து சேவை தினம்தோறும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இன்நிகழ்வு 04.10.2014 இன்று காலை 9.00 மனியளவில் இறக்காம பிரதேச சபையின்  உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் தவிசாளர் யு.கே. ஜபீர் மௌலவி அவர்களின் தலைமையின் ஆரம்பம் செய்துவைக்கப்பட்டது.

இன்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் அவர்கள் பிரதம விருந்தினராகவும்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் விசேட விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இம்போட்மிரர் இறக்காமம் செய்தியாளர் எஸ்.எம். சன்சீர் கருத்துத் தெரிவிக்கையில்:

இப்போக்குவரத்து சேவை மூலம் இறக்காமம், நல்லதன்னிமலை, மாணிக்கமடு, குடுவில், நைனாகாடு, சம்மாந்துறை, கல்முனை போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்களின் பலகாலமாக ஏற்பட்டிருந்த போக்குவரத்துப் பிரச்சனை தீர்ந்துள்ளதாகவும் இன்று போக்கு வரத்து வசதி இலகுபடுத்தப்படுவதோடு மேலும் இம் மக்களிக்கிடையில் புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுவதோடு இச் வேவை மூலம் மக்களின் போக்குவரத்துக்கான நேரமும் பணமும் மீதப்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :