கிழக்கின் பொருளாதாரப் புரட்சிக் கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வு - படங்கள்

 அஸ்லம் எஸ்.மௌலானா-

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, உற்பத்தி, அபிவிருத்தி, கிராமிய, கைத்தொழில், அபிவிருத்தி, மின்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சு சாய்ந்தமருது மல்ஹர் சம்ஸ் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்துள்ள கிழக்கின் பொருளாதாரப் புரட்சிக் கண்காட்சி இன்று வியாழக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, உற்பத்தி, அபிவிருத்தி, கிராமிய, கைத்தொழில், அபிவிருத்தி, மின்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதனை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் கல்முனை மாநகர முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மேலும் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.எம்.மன்சூர், உட்பட அம்பாறை மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் திணைக்களங்களின் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

அம்பாறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி இன்று தொடக்கம் மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் உற்பத்திகளை நவீன தொழில் நுட்பங்களுடன் அதிகரித்து பொருளாதாரத்தில் தன்னிறைவை ஏற்படுத்துவதற்கான ஒரு முன்னோடியாகவே இக்கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, உற்பத்தி, அபிவிருத்தி, கிராமிய, கைத்தொழில், அபிவிருத்தி, மின்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதன்போது தெரிவித்தார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :