பி. முஹாஜிரீன்-
தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்திற்கமைய அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பொது மையவாடியை சிரமதானம் மூலம துப்பரவு செய்யும் நிகழ்வு இன்று (04) சனிக்கிழமை நடைபெற்றது.
அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் நடைபெற்ற சிரமதான நிகழ்வில் கிழக்கு மாகாண நீர்ப்பாசன, வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிரமதானப் பணியினை ஆரம்பித்து வைத்து சிரமதானப் பணியில் ஈடுபட்டார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா உட்பட அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் போன்றோர் இச்சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment