பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ. தாஜகான்-
விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட பொத்துவில் விவசாய குழுக்களின் உறுப்பினர்களுக்கான எலிக்காய்ச்சல் தொடர்பான சுகாதார அறிவூட்டல் நிகழ்வு பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று காலை 10 மணியளவில் நடை பெற்றது.
எலிக்காய்ச்சல் நோய்க்கான தொற்றும் கிருமிகள் குறிப்பாக விவசாய நிலங்களில் நீர் தேங்கு பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றது. இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் நிலை விவசாயத்துறை மூலம் அதிகம் பரவுகின்றது. இதன் நிமித்தம் விவசாய குழுக்களுக்களுக்கான அறிவூட்டல் செயற்ப்பாட்டை வழங்குவதன் மூலம் ஓரளவு எலிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கலாம். என்பதற்காவே சுகாதார அறிவூட்டல் கருத்தரங்கு விவசாயத்துறையினருக்கு வழங்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் வளவாளராக பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்கர் எம்.எம்.சமீம் அவர்கள் கலந்து கொண்டு எலிக்காய்ச்சல் சம்பந்தமான பயனுள்ள விடயங்களை தெளிவு படுத்தினார்.
இந் நிகழ்வில் பொத்துவில் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய தாதிமார்கள் விவசாய குழுத்தலைவர்கள் விவசாய போதன ஆசிரியர் மு. மோகனலக்ஸ்மி ஆகியோரும் கலந்து பயன் பெற்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment