த.நவோஜ்-
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் கீழ் இயங்கும் சக்தி முன்பள்ளி பாலர் பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சிறார்களின் பான்ட் வாத்தியத்துடன் அதிதி மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.
இங்கு சக்தி முன்பள்ளி பாலர் பாடசாலையில் கடமையாற்றி வரும் ஆசிரியர்களான திருமதி.லோ.சாந்தி, திருமதி.ம.சுஜாந்தி, திருமதி.எஸ்.சுசிலா ஆகியோருக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன்hல்நினனவுச் சின்னம்; வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு பெற்றோர்களால் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு அன்பளிப்புப் பொருட்களையும் வழங்கி வைத்தார்கள்.
மேலும் சக்தி முன்பள்ளி பாலர் பாடசாலையில் கடமையாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சிறுதொகைப் பணத்தினையும் இதன்போது வழங்கி வைத்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment