அஸ்ரப் ஏ சமத்-
தர்ஹா டவுண் அல் ஹம்ரா பாடசாலையின் விடுதியில் தங்கி கல்வி கற்று புத்திஜீவிகளான மாணவர்கள் அமைப்பு நேற்று தெஹிவளை மாநகர மண்டபத்தில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.
1950களில் எம்.ஏ பாரி அவர்களை அதிபராகக் கொண்டு அளுத்கம தர்ஹா டவுண் அல் ஹம்ரா பாடசாலையில் மும்மொழிகளிலும் கல்வி வழங்கக் கூடியதாக விழங்கியது 1954 ஆண்டு 5ஆம் தரப் புலமைப்பரிசிற் பரீட்சையில் சித்தியடைந்த முஸ்லீம் மாணவர்களுக்கு இங்கு விடுதியில் தங்கி கற்பதற்கு அனுமதிவழங்கப்பட்டது.
இக் கல்லூரியில் தங்கி கல்வி கற்றவர்கள் நாட்டின் நாலா பாகத்தில் இருந்தும் சிறந்த கல்வி, மார்க்ககல்வியை கற்று பல்வேறு துறைகளில் சிறந்து விழங்கினார்கள் 50 வருடங்களுக்குப் பிறகு தெஹிவளையில் வாழும் தொலைத்தொடர்பு பொறியியலாளர் பௌசுல் ஹக் தலைமையிலும் சுமார் 110க்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் ஒன்று கூடினார்கள்.
இவ் அமைப்பின் செயலாளராக நீர்கொழும்பு அல்ஹிலால் கல்லூரி முன்னளர் அதிபர் எம்.எம். றிழுவான், மற்றும் ஹனிபா, நசீம் அப்துல்லா, எம்.ரீ.எம் முனாஸ், ஆகியோர்களுடன் நிர்வாகக்குழுவொன்று அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது.
திக்குவல்லை கமால் அவர்களினால் அல் ஹம்றா விடுதி மாணவர்களது கட்டுரைகள், படங்கள் மற்றும் கல்லூரி சரித்திரங்கள் அடங்கிய அல் ஹம்ரா நூலொன்றும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
அத்துடன் தலைவர் பௌசுல் ஹக் 2 இலட்சம் ருபாவை நிதியொன்றை அளித்து அந் நிதியில் இருந்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதாந்தம் புலமைப்பரிசில் திட்டமொன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்துடன் பிரதம அதிதியாகவும் இக்கல்லூரியில் புலமைப்பரிசில் சித்தியடைந்து எஸ்.எஸ்.சி வரையும் கல்வி கற்ற ஜாமியா நளீமியா கலா பீட பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தண்னை இந் நிலைக்கு கொண்டுவந்த அல் ஹம்ரா கல்லூரி பற்றி உரையாற்றினார்.
இக் கல்லூரியில் கல்விகற்று மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கணிதத்துறைத் தலைவா,; பேராசிரியர் கலாநிதி எம்.இசட். ஏம். மல்ஹர்தீன் இங்கு உரையாற்றினார்.
அவர் தான் கடந்த வருடம் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்றதாகவும் அங்குள்ள ஏக விரிவுரையாளர்கள் எனக்களித்த பிரியாவிடையில் நீங்கள் ஓய்வுபெற்று ஏதாவது பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராகச் செல்லப்போகீன்றீர்களா எனக் கேட்டனர். நான் சொன்னேன். எனது இறுதி முச்சுவரை தனது மிகுதி வாழ்நாளை எனது இஸ்லாமிய மார்க்கவிடயத்தில்தான் என்னை அர்ப்பணிகக்ப்போவதாக தெரிவித்ததும் அது அவர்களுக்கு மிகவும் விந்தையாக இருந்தது.
எனது வாழ்வில் இவ்வளவு உயர்நிலைக்கு வந்தது நான் அல் ஹம்ரா பாடசாலையில் பெற்ற மார்க்ப்பயிற்சி அதே போன்று எனது பி.எச்.டி படிப்புக்காக லண்டன் பள்ளிவாசலில் 3 வருடம் தங்கினேன் அதே வாழ்க்கை இந்தப் பள்ளிவாசலில்தான் காலாநிதி சுக்ரியும் தங்கி தனது பி.எச்.டி படிப்பை முடித்தாகவும் பேராசிரியர் மல்கர்தீன் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment