சுனாமியால் பாதிக்கப்பட்ட மருதமுனை மக்களுக்கு மருதமுனை மேட்டு வட்டையில் அரசாங்கத்தால் நிர்மானிக்கப்பட்ட 173 வீடுகளைக் கொண்ட வீட்டுத் திட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய 90 வீடுகள் போக எஞ்சியிருக்கின்ற 83 வீடுகளையும் உண்மையாவே சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் அவர்களுக்கும், வீடற்றிருக்கும் அதிக பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த வீட்டுத் திட்டத்தில் எஞ்சியிருக்கின்ற 83 வீடுகளும் இனந்தெரியாத நபர்களினால் நாளுக்கு நாள் சேதமாக்கப்பட்டு வருவதையும், பல ஏழைக் குடும்பங்கள் குமர்ப்பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வீடற்று இருப்பதையும், அவதானித்த கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் கலாநிதி அட்மிரல் சரத் வீரசேகர அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இந்தத் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பகிரங்க அறிவித்தல் ஒன்;றின் மூலம் கல்முனை பிரதேச செயலகத்தில் காணிக்கச்சேரி ஒன்றை நடாத்தி தகுதியானவர்களை இனங்கண்டு எஞ்சியிருக்கின்ற இந்த வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
ஆகவே தகுதியான பொது மக்கள் இந்த வீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆயத்தமாக இருக்குமாறு கிழக்க மாகாண அபிவிருத்தி மன்றத்தின் கல்முனை இணைப்பாளரும,; கல்முனை மாநகர சபை உறுப்பினருமான இஸட்.ஏ.எச்.றஹ்மான் பொது மக்களைக் கேட்டுள்ளார்.
இந்த வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகளை வழங்குவதற்கென 55 பேரின் பெயர்ப்பட்டியல் முன்னர் அம்பாறை மாவட்டச் செயலாளருக்கு வழங்கப்பட்டிருந்த போதும் அந்தப் பெயர்ப்பட்டியலை மாவட்டச் செயலாளர் நிராகரித்திருந்தமை குறிப்பித்தக்கது.

0 comments :
Post a Comment