கண்டி தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளையின் நூற்றாண்டு சிறப்பு நிகழ்வு!

இக்பால் அலி-


ண்டி தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளையின் நூற்றாண்டு  சிறப்பு நிகழ்வும் தமிழ் நாட்டின் வாழ்நாள் சதனையாளர் விருது பெற்ற எழுத்தாளர்  அந்தனி ஜீவாவின் ஒரு வானம்பாடியின் நூல் அறிமுக விழாவும் கண்டி கெப்பிட்டிபொல  மண்டபத்தில் இன்று 26-10-2014 நடைபெற்றது.

கண்டி தமிழ் சங்கத்தின் தலைவர் ரா. நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  கவிமணி சி. வி. வேலுப்பிள்ளையின் உருவப்படத்தின் திரைச் சீலையை சட்டத்தரணி எஸ். எப். எம்.  சவாஹீர் திரை நீக்கம் செய்து வைத்தார்.

இதில் மலைகத்திற்கு நீண்ட காலமாக கலை இலக்கியப் பணியாற்றி வரும் இருவர்  கௌரவிக்கப்பட்டனர். ஒருவர் நாடகக் கலைஞர் ராஜா ஜென்ஸ்கீன் அவர்களை ஐடெக் கல்வி  நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிபாளர் ஐ. ஐனுடீன் பொன்னாடை போர்த்தி  கௌரிவப்பதையும் மற்றைய நபர் ஊடகக் கலைஞர் இக்பால் அலி நாடகக் கலைஞர் கலைச் செல்லவன்  எம் எம் ரவூப் மற்றும் சமூக சேவையாளர் சிதம்பரநாதன் ஆகியோர் கௌரவிப்பதைப் 
படங்களில் காணலாம். 





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :