ஹாசிப் யாஸீன்-
காரைதீவு முச்சந்தியிலுள்ள சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணிக் கூடாக காரைதீவு பிரதேச சபையினர் எல்லை வேலி அமைத்திருப்பதாக தெரிவித்து பிரதேச சபைக்கு எதிராக சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் சம்மாந்துறைப் பொலிஸில் செவ்வாய்க்கிழமை (30) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் சம்பந்தமாக மேலும் தெரியவருவதானது,
சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணி காரைதீவு முச்சந்தியில் உள்ளது. நாட்டில் நிலவிய மூன்று சகாப்த காலமாக அசாதாரண சூழ்நிலை காரணமாக இக்காணி பராமரிப்பின்றி காணப்பட்டது.
தற்போது நாட்டில் நிலவும் சமாதான சூழ்நிலையினை அடுத்து இக்காணியினை அடையாளப்படுத்தி எல்லையிடுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதனை தடுத்து நிறுத்துவதற்காக சிலர் காரைதீவு பிரதேச மக்கள் மத்தியில் பிழையான தகவல்களைப் பரப்பு மக்களை ஒன்றுதிரட்டி இவ் எல்லையிடும் நடவடிக்கையினை தடுத்தனர்.
இதனால் அங்கு பதற்ற நிலை தோன்றியது. இதனை கட்டுப்படுத்தும் முகமாக காரைதீவு பிரதேச செயலகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் உயர்மட்ட சமாதானக் கூட்டம் இடம்பெற்றது. இதில்; காரைதீவு பிரதேச பிரதிநிதிகள்;, சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய இக்காணிக்குள் தீர்;வு காhணும் வரை சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினரோ தமிழர் தரப்பினரோ உட்செல்லக்கூடாது என தீர்மானிக்கப்பட்டதுடன் இத்தீர்மானம் மாவட்ட அரசாங்க அதிபரினால் இருசாருக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் இவ்வறிவித்தலை மீறி காரைதீவு பிரதேச சபையினர் தனது காரியாலயத்திற்கான பொது எல்லைக்கான வேலியினை பள்ளிக் காணிக்கூடாக அமைத்துள்ளனர்.
இதனை அறிந்த சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஸ்;தலத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் இவ்விடயம் சம்பந்தமாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், சிரேஷ்ட பொஸிஸ் அத்தியட்சகர், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதுடன் காரைதீவு பிரதேச சபைக்கு எதிராக சம்மாந்துறை பொலிஸில் முறைபாடும் செய்யப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது, காரைதீவு பிரதேச மக்கள் மிக நெருக்கமாக இப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இக்காணிப் பிரச்சினையை சிலர் பூதாகரமாக்கி இம்மக்கள் மத்தியில் குரோதத்தையும், இன முரண்பாட்டை ஏற்படுத்த சில நாசகார சக்திகள் முயற்சிக்கின்றனர். இதற்கு காரைதீவு பிரதேச மக்கள் இடமளிக்கக் கூடாது என்பதுடன் இப்பிரச்சினையினை இருசாராரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வது சிறந்தது என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment