பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அங்கீகாரத்தில் விஷேட நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னெற்றங்களை ஆராயும் விஷேட மீளாய்வு கூட்டம் 11-10-2014 இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,ஜனாதிபதியின் ஆலோசகரும்,கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர்களான எம்.வை.வஹாப்,ஆர்.ரணதுங்க,மட்டு –மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள்,உள்ளுர் திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் இவ் வருடம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இம் மாவட்டத்திற்கு அங்கீகரீத்துள்ள 1347 மில்லிய ரூபா நிதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் 2122 திட்டங்களின் முன்னெற்றங்கள் பற்றி ஆராயப்பட்டதுடன் தாமதிக்கின்ற திட்ங்களை டிசம்பர் மாதத்துள் பூர்த்தி செய்து கொள்ள தேவையான ஆலோசனைகளும் முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.
இவ் வருடத்தில் பூர்த்தி செய்யப்படாத திட்டங்களின் மிகுதிப் பணம் மீளத் திரும்பி செல்ல வாய்ப்பிருப்பதாகவும் எனவே சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளும் மாவட்ட பிரதேச செயலாளர்களும் ஒதுக்கீட்டுப் பணங்களை செலவு செய்து இப் பிரதேச மக்களுக்கு உதவ வேண்டுமென இக் கூட்டத்தில் பணிப்புரை வழங்கப்பட்டது.
இம் மாவட்டத்திற்கு இவ் வருடம் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் ,கிராமியப் பாடசாலை அபிவிருத்தி,பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு கிழக்கின் நவோதயம் ,தேசத்திற்கு மகுடம்,வாழ்வின் எழுச்சி வாழ்வாதாரம், கிராமிய வீதி உட்பட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment