முன்னாள் அமைச்சர் அமரர் காமினி திஸாநாயக்கவின் மகனும் தற்போதைய அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தனது அமைச்சுப் பதவிகளைத் துறந்து விட்டு ஆளுங்கட்சியிலிருந்தும் விலகப் போவதாக சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதியின் பின்னர் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் விசேட உரை ஒன்றினை ஆற்றி விட்டு அவர் பதவியையும் கட்சியையும் விட்டு விலகவுள்ளார் என தெரிய வருகிறது.
இதன் பின்னர் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளமை தொடர்பில் நுவரெலிய மாவட்டத்தின் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்றும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில் லங்கா சீ நியுஸ்

0 comments :
Post a Comment