மயங்கி விழுந்த ஜெ.! அலறிய சசிகலா!- சிறையிலிருந்து அதிர்ச்சித் தகவல்கள்

ஹைகோர்ட்டில் ஜாமீன் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்பதுதான், ஜெயிலில் இருந்த ஜெ.வின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது என்று சொல்கிற அவரது வழக்கறிஞர்களும் சிறைத்துறை அதிகாரிகளும், வெறும் ஜாமீன் போதாது, தனக்கு இந்த தண்டனை பெற்றுத் தந்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்புக்கும் தடை வாங்கவேண்டும் என்பதே ஜெ.வின் எண்ணமாக இருந்தது.

அக்டோபர் 7-ந் தேதி பரப்பன அக்ரஹாரம் சிறையிலிருந்து வெளியேறி விடுவோம் என்று மட்டுமல்ல, தமிழகத்தின் முதல்வராக மறுபடியும் பதவியேற்றுவிடு வோம் என்று அசாத்தியமான நம்பிக்கை அவரிடம் இருந்தது என்கிறார்கள்.

சிறையில் ஜெ.வுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்து தரும் பொறுப்பை கவனிப்பவர் வார்டன் மகாதேவ நாயக்கர். அவர்தான் சிறையிலுள்ள ஜெ.வுக்கும் பெங்களூருவில் தங்கியிருந்த ராம் ஜெத்மலானி தலைமையிலான வழக்கறிஞர் டீமுக்கும் பாலமாக இருந்தவர்.

ஜாமீன் மீதான விசாரணை நடைபெற்ற அக்.7 செவ்வாயன்று காலையில் மகாதேவ நாயக்கர் கையில் ஒரு மனு இருந்ததைக் குறிப்பிடும் சிறைத்துறையினர், "அதுதான் ஹைகோர்ட் நீதிபதி சந்திரசேகரா கோர்ட்டில் ஜெ.வுக்காக, ராம்ஜெத்மலானி தாக்கல் செய்த மனு' என்கிறார்கள்.

கோர்ட்டுக்குப் போவதற்கு முன் ஜெ.வின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த மனுவில், நீதிபதி குன்ஹாவின் தீர்ப்புப் பகுதிகளை ராம் ஜெத்மலானி கடுமையாக விமர்சித்திருப்பதை ஜெ. கவனமாகப் படித்திருக்கிறார். அதில் மேலும் சில திருத்தங்களை செய்யவேண்டும் என நினைத்த ஜெ., அ.தி.மு.க. வக்கீல் ஒருவரை சிறைக்கு வரவழைக்கச் சொல்லியிருக்கிறார்.

மகாதேவ நாயக்கர் மூலம் வந்த அந்த வக்கீலிடம், ஜெத்மலானியின் மனுவில் செய்ய வேண்டிய திருத்தங்களையும் கூடுதலாக்க வேண்டிய கடுமையான விமர்சனங்களையும் குறிப்பிட்டுச் சொன்னாராம் ஜெ. அந்த வக்கீல் புறப்படும்போது, ""எனக்குத் தேவை வெறும் ஜாமீனல்ல. தீர்ப்புக்குத் தடைதான் முக்கியம்'' என்று ஜெ. அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

அவரைப் பொறுத்தவரை, ஜாமீன் விவகாரத்தை முன்னாள் பிரதமரும் தனது அரசியல் நண்பருமான தேவகவுடாவிடம் ஒப்ப டைத்துவிட்டதால் அது பற்றி கவலைப்படாமல் இருந்திருக்கிறார். தேவகவுடாவின் மருமகனான மஞ்சுநாதா, ஜெ.வின் ஜாமீனுக்கான முயற்சிகளை ஏற்கனவே மேற்கொண்டிருந்தார்.

இவர்தான், அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன் சொன்னபடி ஜெ.வின் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையான ஜெயதேவி ஆஸ்பிட்டலை ரெடியாக வைத்திருந்தவர். மஞ்சுநாதாவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சம்பந்தத்தின் உதவி நல்லபடியாக கிடைத்து வருகிறது. இருவரும் அரசு வக்கீல் பவானிசிங்கை சந்தித்துப் பேசியதாக கர்நாடக வழக்கறிஞர்கள் வட்டாரம் சொல்கிறது.

ஜாமீனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பவானிசிங் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான மனுவைத் தயாரித்தவர் அவரிடம் உதவி வழக்கறி ஞராகப் பணியாற்றும் முருகேஷ் மரடி. அதில் சில திருத்தங்களை செய்த பவானிசிங், "நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம் எனக் கோர்ட்டில் சொல்வேன்' என்றும் தன்னை சந்தித்தவர்களிடம் கூறியுள்ளார் பவானிசிங்.

4 வருடம் தண்டனை பெற்றவர், ஜாமீனில் வர அரசு வக்கீலின் கருத்து தேவையில்லை என ராம்ஜெத்மலானி வைக்கும் வாதத்தையொட்டி நீங்களும் பேசுங்கள் என பவானிசிங்கை சந்தித்த வக்கீல் டீம் பேசியதாகச் சொல்கிறார்கள்.

ஜெ.வுக்கும் இந்த மூவ்மெண்ட்டுகள் தெரிவிக்கப்பட, அவரது நம்பிக்கை அதிகரித்திருந்தது. தீர்ப்புக்குத் தடை வாங்கவேண்டும் என்பதில் ஜெ.வின் கவனம் முழுமையாக இருந்துள்ளது. ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு முதல் நாளிலிருந்தே அதற்கான மூவ்களில் அவர் மும்முரமாக இருந்திருக்கிறார்.

திங்களன்று (அக்.6) சிறையில் அவரைப் பார்ப்பதற்கு அவரது அண்ணன் மகள் தீபா வந்திருந்தார். மூன்று கார்களில் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களுடன் தன் கணவருடன் வந்த தீபாவை, ஜெயில் சூப்பிரண்ட்டெண்ட் ஜெயசிம்ஹா வரவேற்று தனது அலுவலக அறையில் காக்க வைத்துவிட்டு, ஜெ.வின் பாதுகாப்பை கவனிக்கும் உதவி ஜெயிலர் திவ்யஸ்ரீ மூலம் தகவல் அனுப்பினார்.

நான்தான் வரச் சொன்னேன்'' என்ற ஜெ., ""வெயிட் பண்ணச் சொல்லுங்க. கேஸ் விஷயத்துல நான் பிஸியா இருக்கேன்'' என்று சொல்லி அனுப்பிவிட்டார். தீபா காத்திருக்க வேண்டுமே என்ற அக்கறையில், நீங்க சசிகலாவைப் பாருங்களேன்'' என்று திவ்யஸ்ரீ சொல்ல, ""அந்தம்மாவை நான் ஏன் பார்க்கணும்'' என கோபம் காட்டிய தீபா, ""அவங்களால தான் என் அத்தை ஜெயிலில் இருக்காங்க. நான் சென்னைக்குப் போய், இவங்களைப் பற்றி பேட்டி கொடுக்கப்போறேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

இதனை உதவி ஜெயிலர் திவ்யஸ்ரீ நேராக ஜெ.விடம் போய்ச் சொல்ல, "தீபாவை சைலண்ட்டா இருக்கச் சொல்லுங்க' என்று கண்டிப்பான குரலில் சொல்லி அனுப்பியிருக்கிறார் ஜெ.

தன் அத்தையின் மனநிலையைப் புரிந்துகொண்ட தீபா, சூப் பிரண்ட்டெண்ட் ஜெயசிம்ஹா அறையில் உணவுப்பொருட்களை வைத்துவிட்டு, ஜெ. பற்றி ஜெயசிம்ஹா சிலாகித்துப் பேசியதை சுமார் இரண்டு மணிநேர அளவிற்குக் கேட்டபடி இருந்திருக்கிறார்.

அப்போதும் ஜெ. தன் கேஸ் விஷயமான ஆலோ சனைகளை முடிக்கவில்லை என்பதையறிந்த தீபா, "இனி அத்தையிடமிருந்து அழைப்பு வராது' என சிறையிலிருந்து திரும்பிவிட்டார்'' என்கிறார்கள் தீபாவுக்கு நெருக்கமானவர்கள்.

ஜாமீன் மனு விசா ரணைக்கு வந்த அக்டோபர் 7 அன்று அதிகாலையில் எழுந்த ஜெ., தான் வணங்கும் சாமுண்டீஸ்வரி அம்மன் படத்திற்கு சிறப்பு பூஜை செய்தார். எப்படியும் வெளியே வந்துவிட வேண்டும் என்பதுடன், தீர்ப்புக்கும் தடை கிடைக்க வேண்டும் என்பதும்தான் அவரது உருக்கமான பிரார்த்தனை.

நம்பிக்கை ஒருபுற மும் பதட்டம் மறுபுறமுமாக இருந்ததால், ஜெ.வின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவற்றில் மாறுபாடுகள் ஏற்பட்டிருந்தன'' என்கிறார்கள் சிறை மருத்துவர்கள்.

கோர்ட்டுக்கு அரசு வக்கீல் பவானிசிங்கை கவனமாக அழைத்து வந்தவர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சம்பந்தம். வரும்போதே நிறைய பேசிக்கொண்டு வந்ததை அங்கிருந்தவர்கள் கவனிக்கத் தவறவில்லை. அதேநேரத்தில், சிறையில் கன்னட செய்திச் சேனல்களில் கவனத்தை செலுத்தினார் ஜெ.

அவருடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் ஒரே அறை யில் இருந்துள்ளனர். ராம் ஜெத்மலானியின் நீண்ட நேர வாதம், ஜாமீன் கோரியுள்ள மற்றவர் களுடைய வக்கீல்களின் வாதம் என பதைபதைப்புடன் நகர்ந்த அந்த நிமிடங்களில், ஜாமீனுக்கு பவானிசிங் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை செய்திச் சேனல்கள் மூலம் தெரிந்துகொண்ட ஜெ., அந்த மகிழ்ச்சியை தன் பக்கத்தில் இருந்த இருவரிடமும் பகிர்ந்திருக்கிறார்.

வாதங்கள் முடிவடைந்தும், தீர்ப்பு வரத் தாமதமானபோது ஜெ. பதட்டமானார். முகத்தில் பூத்த வியர்வையுடன் அவர் வழக்கறிஞர்களைத் தொடர்புகொண்டு பேசுவதற்கான முயற்சிகளில் படபடப்புடன் இருந்தார்.

தீர்ப்பு நிச்சயமாக நமக்கு சாதகமாகத்தான் இருக்கும்மா...… ஜாமீனுடன் சேர்ந்தே வரும்'' என்று வக்கீல் நவநீதகிருஷ்ணனிடமிருந்து சிறைக்குத் தகவல் எட்ட, ஜெ. மற்றும் அவருடன் இருந்த இருவரின் படபடப்பு சற்று அடங்கி நம்பிக்கை மீண்டும் அதிகரித்தது. ஆனால், அந்த நம்பிக்கை அதிக நேரம் நீடிக்கவில்லை.

மாலை நான்கரை மணி அளவில், ஜாமீன் மறுப்பு என்ற ஃப்ளாஷ் நியூசுடன், "குன்ஹாவின் தீர்ப்பு தெளிவாக உள்ளது' என உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா தனது உத்தரவில் தெரிவித்து, தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுத்து விட்டார் என்ற தகவலும் சேர்ந்து வர, ஜெ.வுக்கு பலத்த அதிர்ச்சி. கன்னட சேனலில் ஓடிய எழுத்துகளை சசிகலாவும் இளவரசியும் படிக்க முடியாததால் அவர்கள் இருவரும் ஜெ.வைப் பார்த்தனர்.

அப்போது ஜெ.வின் முகம் ஏமாற் றத்திலும் வேதனையிலும் இருப்பதை அவர்கள் கவனித்தனர். எதிர்பார்ப்புக் கும் நம்பிக்கைக்கும் முற்றிலும் மாறாக ஹைகோர்ட்டின் உத்தரவு அமைந்ததால் ஜெ.வுக்கு பிரஷர் அதிகமாகி, உடல்நிலை மோசமானது.

சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனை விவரத்தை குன்ஹா அறிவித்தபோது எப்படி மயங்கிய நிலைக்குச் சென்றாரோ அதே நிலைதான் ஜாமீன் மனு மீதான உத்தரவின்போதும் அவருக்கு ஏற்பட்டது.

இதைப்பார்த்து சசிகலாவும், இளவரசியும் பதறி அலற... சிறை மருத்துவ டீம் சில நொடிகளில் அங்கு இருந்தது. ஜெ.வை பரிசோதித்த டாக்டர், "இரத்த அழுத்தம் குறைந்ததால் இப்படி ஆகிவிட்டார்' என்று சொல்லி உடனடியாக பி.பி., சுகர் டெஸ்ட் செய்திருக்கிறார். அதன் அளவைப் பார்த்துவிட்டு உரிய மருந்துகள் உடனடி யாகக் கொடுக்கப்பட, ஜெ. மீண்டும் இயல்பான நிலைக்கு வந்தார்.

உடல்நிலை சீரானதும் அவரை ஓய்வெடுக்கும்படி டாக்டர் டீம் சொல்லி யிருக்கிறது. பி.பி.யையும் சுகரையும் கண்ட்ரோலில் வைத்துக்கொள்ளும் வகையில் அதிக பதட்டப்படாமல் இருக்க வேண்டும் என்றும் அதற்கு ரெஸ்ட் முக்கியம் என்றும் தெரிவித்து, மருந்துகளைக் கொடுத்திருக்கிறார்கள்.

எனினும், ஜாமீனும் தீர்ப்பு ரத்து செய்யப்படுவதுமே தனக்கு முழுமையான நிம்மதியைத் தரும் என நினைக்கும் ஜெ., சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது பற்றி அன்று மாலையே தனது வக்கீல்கள் டீமுடன் ஆலோசிக்கத் தொடங்கிவிட்டார்.

மறுநாள் நவநீதகிருஷ்ணன் தலைமையில் வழக்கறிஞர் டீம் ஜெ.வை சந்தித்து சுப்ரீம் கோர்ட் அப்பீல் மனுக்களில் கையெழுத்து பெற்றது.

அப்போது ""எதுவுமே சரியாக நடக்கலை. உங்களை நம்புனது வேஸ்ட். இனிமே செய்றதை ஒழுங்கா செய்யுங்க'' என்று கோபமாக கூறியிருக்கிறார் என்று சொல்லும் சிறைவட்டாரம்... "முன்னாள் முதல்வரின் உடல்நிலையில் நாங்கள் சிறிதும் அலட்சியம் காட்டுவதில்லை. அவர் நல்லபடியாக இருக்கவேண்டும் என்ற அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறோம். தேவையானவற்றை செய்து தருகிறோம்' என்கிறது.

வயதுக்கே உரிய உடல்நலப் பிரச்சினைகளை ஜெ சந்தித்தாலும், அதனை சரிப்படுத்தும் கவனத்துடன் மருத்துவ டீம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :