ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு சில இணையத்தளங்களைப் பயன்படுத்தவதற்கு சதி வேளைகள் நடைபெற்று வருவதாகவும் கட்சிப் போராளிகள் இது தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டத்திற்கான காலம் கனிந்துள்ள நிலையில் அதனை குழப்பி கட்சியை விளவுபடுத்துவதற்கான சதி முயற்சியே பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவி பெறப்போகின்றார்கள் என்கின்ற செய்திகளாகும்.
எப்படியான செய்திகளை பரப்பினாலும், எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாகவம், சமூகப் போராட்டத்தை முன்னடுப்பவர்களாகவும் இருக்கின்றனர். கட்சிக்கு வெளியே உள்ளவர்களும், கட்சி என்று பதவி மோகம் பிடித்தவர்களும் பிழையான செய்திகளை பரப்ப முனைகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸின் உரிமைப் போராட்டத்தை இன்று தலைவரோடு சேர்ந்து தூக்கிப் பிடித்து செயல்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களின் மக்கள் எழுச்சியை பொறுத்துக்கொள்ளாதவர்கள் இணையத்தளங்களில் செய்தியை பிரசுரிப்பதன் மூலம் மக்களை நம்ப வைக்கலாம் என தப்புக்கணக்குப் போட்டுள்ளனர். இவர்களின் தப்புக்கணக்கு அவர்களுக்கே பாதிப்பாக வந்து முடியப்போகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் முஸ்லிம் சமூகத்தின் விடுதலை போராட்டத்திற்கு தனது பதவியையே பொறுட்டாக நினைக்காதவர். வெறும் அமைச்சுக்களுக்காக சமூகத்தைக் காட்டிக்கொடுக்கமாட்டார்.
முஸ்லிம்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக மூதூரில் நடு வீதியில் நின்று போராடியவர்தான் ஹரீஸ் எம்.பியாகும். அப்படியான ஒருவருக்கு சில பொறாமைக்காரர்களின் சதிகள் ஒரு பொருட்டே அல்ல.
இன்று(12) இரவு 2.30ற்கு இம்போட் வானொலியின் அரசியல் களம் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். நீங்களும் அழைத்து கேள்விகளை கேட்க முடியும் SKYPE:- import.radio1
0 comments :
Post a Comment