வாகரை ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தில் கேதார கௌரி விரதத்தின் இறுதி நாள்




த.நவோஜ்-

வாகரை ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் கண்டலடி சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தில் கேதார கௌரி விரதத்தின் இறுதி நாளான வியாழக்கிழமை விசேட பூசைகள் இடம்பெற்றது.

கடந்த 03ம் திகதி ஆரம்பமான கேதார கௌரி விரதம் 21 நாட்களாக அடியார்கள் விரதம் அனுஸ்டித்து வியாழக்கிழமை தோரணை அணிவித்து தமது விரதத்தினை நிறைவு செய்தனர்.

ஆலய பிரதம குருவும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனினால் அபிஷேகப் பூசை, சிவலிங்கத்திற்கான பூசைகள் இடம்பெற்றது.

பின்னர் விரத அடியார்களுக்கு தோரணை வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது நூற்றுக் கணக்கானோர் விரத்தினை அனுஸ்டித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :