தியாகராஜா மத்திய மகாவித்தியாலயத்தில் மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

 பழுலுல்லாஹ் பர்ஹான்-

காரைநகர் தியாகராஜா மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார்.

குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அவர்கள் இன்றைய தினம் (14) காரைநகருக்கு விஜயம் மேற்கொண்டு மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார்.

பிரதான வாயிலில் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்கள் பாடசாலை சமூகத்தால் வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து 60 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.

இதனடிப்படையில் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொழில் நுட்பப் பாடநெறிகளை போதிக்கும் பாடசாலைகளில் காரைநகர் தியாகராஜா மத்திய மகாவித்தியாலயமும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்விற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்து வைத்த அதேவேளை புதிய கட்டிடத்தையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார்.

புதிதாக அமைக்கப்பட்ட இவ் ஆய்வுகூடத்தில் நான்கு கற்கை நெறிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அமைச்சர்களான பந்துல குணவர்த்தன, டக்ளஸ் தேவானந்தா, பவித்திரா வன்னியாராச்சி ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, காரைநகர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் வீ.கண்ணன் உள்ளிட்ட கல்விப்புலம் சார்ந்தோர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :