சிறுவர்களைச் சிறந்த தலைவர்களாக்க சமூகத்தின்சகலதரப்பினரும் கைகோர்க்க வேண்டும்- அமைச்சர் மன்சூர்

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

'எதிர்காலத் தலைவர்களாகவும், சமூகம் வேண்டி நிற்கின்ற நற்பிரஜைகளாகவும்  உருவாக இருக்கும் சிறுவர்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் விடயத்தில் சமூகத்திலுள்ள  சகல தரப்பினரும் கைகோர்த்து உதவ முன்வர வேண்டும்' என்று மாகாண அமைச்சர்  எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

மருதமுனை சம்ஸ் 95 சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி.எஸ்.எம்.இஹ்லாஸ் தலைமையில   நடைபெற்ற 'பாலர்கள் ஒன்று கூடலும், விளையாட்டு விழாவும்'; நேற்று மருதமுனை மசூர்  மௌலானா விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இதில் மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை  பராமரிப்பு, மகளீர் விவகாரம், கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத் துறை,  தொழிற்பயிற்சிக் கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து  கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் பேசுகையில்;

'இன்றையச் சிறுவர்கள் நாளையத் தலைவர்கள். நாளையத் தலைவர்களாக  வரஇருக்கின்ற இக்குழந்தைகளை வளமும், நலமும் உள்ளவர்களாகப் பாதுகாத்துப் பராமரிப்பது  நமது தலையாய கடமையாகும். 

நாம் நமது வாழ்வில் சந்தித்த சவால்கள், இன்னல்களை விடவும் பல்வேறு பட்ட கோணங்களிலான சவால்களையும், இன்னல்களையும் இப்போதையச் சிறுவர்கள் சந்திப்பதற்கான சூழல்கள் உருவாகியுள்ளன. எனவே அவைகளைத் தைரியமாக எதிர் கொள்ளக் கூடிய பக்குவமுள்ள பிள்ளைகளாக இவர்களைப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்.

அன்பார்ந்த பெற்றோர்களே, பெரியோர்களே நாம் நமது குழந்தைகள் விடயத்தில் மிக விழிப்பாக இருக்க வேண்டும். 'அன்போடு எங்களைப் பாதுகாருங்கள்' என்பதுதான் இவ்வருட சிறுவர் தின மகுட வாசகமாகும். இதை வைத்துப் பார்க்கும் போது நமது  குழந்தைகள் விடயத்தில் பராமரிப்பதை விட, பாதுகாப்பாளர்களாக இருக்க வேண்டிய  அவசியம் ஏற்பட்டுள்ளது. பிள்ளைகளைப் பாதுகாப்பாக வளர்த்தெடுக்க வேண்டிய  நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.

இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் அச்சுறுத்தல்  என்பன நாளுக்கு நாள் இடம்பெறுகின்றன. சொந்த வீடுகளுக்குள் பாதுகாப்பிலலை,  அச்சுறுத்தல், சொந்த ஊர்களுக்குள் பாதுகாப்பில்லை, அச்சுறுத்தல். உறவினர்கள்,  அயலவர்கள் யாரிடத்திலும் சிறுவர்களுக்குப் பாதுகாப்பில்லை, அச்சுறுத்தலான  நிலைமை இன்று தோன்றியுள்ளது. வேலியே பயிரை மேய்வது போன்று சிறுவர்களுக்குப்  பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே இன்று அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும்  மாறியுள்ளார்கள். 


இவ்வாறான நிலைமை, சம்பவங்கள் நாளுக்கு நாள் எல்லாப்பிரதேசங்களிலும் பதியப்பட்டு  வருகின்ற இச்சூழலில் இவர்களைப் பாதுகாக்கின்ற விடயத்தில் தாய்மார்களின் பங்களிப்பு  மிகப் பெறுமதி வாய்ந்ததாகக் கருதப்படுகின்;றது.' எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :