காரைதீவு விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய அமரர்.சாமித்தம்பி தனுராஜன் ஞாபகார்தக்கிண்ண இறுதிப்போட்டி கழக உபதலைவர் Eng.A.லிங்கேஸ்வரன் தலைமையில் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் நிந்தவூர் லகான் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கல்முனை ரொப்பாஸஸ் விளையாட்டுக்கழகம் கழமிறங்கியது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நிந்தவூர் லகான் விளையாட்டுக்கழகமானது முதலில் துடுப்பாட்டத்தினை தேர்ந்தெடுத்து 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கற்றுக்களையும் இழந்து 111 ஓட்டங்களைப்பெற்றது.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய கல்முனை ரொப்பாஸஸ் அணியினர் 13.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கற்றுக்களை மாத்திரம் இழந்து 112 ஓட்டங்களைப்பெற்று போட்டியில் 3 விக்கட்டுக்களால் வெற்றியீட்டி அமரர்.சாமித்தம்பி தனுராஜன் ஞாபகார்த்த கிண்ணத்தினை தன்வசமாக்கினர்.
இவ்விறுதிப்போட்டியில் சிறப்பாட்டக்காரருக்கான விருதினை கல்முனை ரொப்பாஸஸ் அணி வீரர் பைசல் அவர்கள் 46 ஓட்டங்கள் மற்றும் 2 விக்கற்றுக்களை கைப்பற்றி அந்த விருதினை சுவீகரித்த அதேவேளை கல்முனை ரொப்பாஸஸ் அணிவீரர் நஜாத் சுற்றுப்போட்டியின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
இவ்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக Eng.K.வினோதரன் (பிராந்திய முகாமையாளர்,NWS&DB, மட்டக்களப்பு) அவர்கள் கலந்து கொண்டதோடு சிறப்பு அதிதிகள் மற்றும் விசேட அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment