தாழமுக்க வானிலை முன்னறிவிப்பு

தென் கிழக்கு வங்காளவிரிகுடா பகுதியில் தோன்றியுள்ள தாழமுக்க பிரதேசம் (டுழற pசநளளரசந யசநய) காரணமாக நாளை முதல் (08.10.2014) இலங்கையின் கிழக்கு கடல் பிராந்தியம் மற்றும் கிழக்கு கரையோர மாவட்டங்களின் காலநிலை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும். இது பின்னர் வடமேற்கு பிராந்தியத்திற்கும் பரவும்.

அத்துடன் நாட்டின் அனேகமான பகுதிகளில் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் இடியுடன்கூடிய மழை காணப்படும். இந்த இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பத்தில் காற்று பலமானதாக வீசும்.

பொது மக்கள் இடிமின்னல் தாக்கத்திலிருந்து ஏற்படும் சேதத்தைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு கடல் பிராந்தியங்களில் மழை அல்லவது இடியுடன்கூடிய மழை காணப்படும். ஏனைய கடல் பிராந்தியங்கள் சிலவற்றிலும் இடையிடையே மழை காணப்படலாம். கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 20 – 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் தென்மேற்குத் திசையிலிருந்து வீசும்.

புத்தளம் முதல் மன்னார் ஊடான காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியம் மற்றும் அம்பாந்தோடடை முதல் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசுவதனால் இக்கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

க.சூரியகுமாரன்
வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :