இப்றாஹிம் (அலை) அவர்கள் தனது செல்வப் புதல்வன் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுக்கக் கனவு கண்டு, அதனை தியாகத்தோடு நிறைவேற்ற துணிந்த போதே தியாகம் உலகிற்கு எடுத்துக் காட்டப்பட்டது. அதில் அவர் வெற்றி பெற்றார். இவ்வாறு இறுதி நபி (முகம்மது (ஸல்) அவர்கள் வரையும் எல்லா நபிகளும் தியாகத்தின் மூலமாகத்தான் வெற்றி பெற்றனர். அதன் பிரதி பலன் தான் இன்றைய வியாபகமான இஸ்லாமிய உலகு.
தியாகம் என்பது மனிதனோடு இணைந்திருக்கக் கூடிய ஒரு நற்பண்பு தந்தை தியாகம் செய்தால்தான் குடும்பம் செழிக்கும். அரசன் தியாகம் செய்தால் நாடு பெருகும். மாணவன் தியாகம் செய்தால் வெற்றி கிடைக்கும் சமூகத்தின் தியாகம்தான் கூட்டுறவான வாழ்வு.
பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நம்முன்னோர்கள செய்த தியாகமே இம்மண்ணிற்கு உயர்வையும், கௌரவத்தையும் தந்தது. எமது நாட்டில் புரையோடிப் போயிருந்த பயங்கரவாதத்தை நாம் தியாகத்துடன்தான் வென்றெடுத்தோம். அதேபோல் இன்ஷh அல்லா எமது தியாகம் முரண்பாடுகளையும், வாதங்களையும், விகார சிந்தனைகளையும் உடைத்தெறிவதோடு எதிர்காலத்தில் முரண்பாடுகளற்ற கூட்டு வாழ்க்கையை எமக்குப் பெற்றுத்தரும்.
மேலும்இ ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு புனித மக்கமாநகரம் சென்றுள்ள ஹஜ்ஜாஜ்களின் ஹஜ் கடமை அல்லாஹூதஆலாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுஇ அவர்கள் புரிந்த நியாயமான பிரார்த்தனைகள் நிறைவேறுவதற்கும் பிரார்த்திப்போம்.
தியாகம் - இஸ்லாத்தின் ஆணிவேர்
தியாகம் - வெற்றியின் மூலமந்திரம்
ஏ.எல்.எம். அதாஉல்லா (பா.உ)
தலைவர் - தேசிய காங்கிரஸ்
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர்.
.jpg)
0 comments :
Post a Comment